(நெவில் அன்தனி)
இலங்கையின் இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணித் தலைவர் சரித் அசலன்கவை மாற்று வீரராக ஐபிஎல் அணிகளில் ஒன்றான மும்பை இண்டியன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
மும்பை இண்டியன்ஸின் கடைசி ஐபிஎல் லீக் போட்டி முடிவடைந்த பின்னரே சரித் அசலன்க மும்பை இண்டியன்ஸில் இணையவுள்ளார்.
தென் ஆபிரிக்க வீரர் கோர்பின் பொஷ் தேசிய அணியுடன் இணையவுள்ளதால் மாற்று வீரராக சரித் அசலன்கவை 75 இலட்சம் இந்திய ரூபாவுக்கு மும்பை இண்டியன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
சரித் அசலன்கவுடன் ஜொனி பெயாஸ்டோவ், ரிச்சர்ட் க்ளீசன் ஆகியோரையும் மும்பை இண்டியன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மூவரினதும் ஒப்பந்தங்கள் ப்ளே ஒவ் சுற்றுக்கு மும்பை இண்டியன்ஸ் தகுதிபெற்றால் மாத்திரமே அமுலுக்கு வரும்.
இங்கிலாந்து வீரர் வில் ஜெக்ஸுக்கு பதிலாக மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜொனி பெயாஸ்டோவை 5 கோடியே 25 இலட்சம் ரூபாவுக்கும் தென் ஆபிரிக்க வீரர் ரியான் ரிக்ல்டன்னுக்கு பதிலாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் க்ளீசனை ஒரு கோடி ரூபாவுக்கும் மும்பை இண்டியன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
ப்ளே ஒவ் சுற்றுக்கு மும்பை இண்டியன்ஸ் தகுதிபெறுவதற்கு இன்னும் 2 புள்ளிகள் தேவைப்படுகிறது.
டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக நாளை 21ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இண்டியன்ஸ் வெற்றிபெற்றால் ப்ளே ஓவ் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுடன் இணைந்துகொள்ளும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM