தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது.
இயக்குநர் ஜெய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் யோகி பாபு, மேகா தாமஸ், ஜாசிக், அஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
நரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிஜு சாம் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ரூக்ஸ் மீடியா லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரபு அண்டனி- மது அலெக்சாண்டர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இன்றைய இளம் தலைமுறையினருக்கான ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது.
தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்துடன் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து வெளியான' ஜோரா கைய தட்டுங்க' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM