'புன்னகை தேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர வாரிசு நடிகர் ஹம்சவர்தன் - தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் கேரளாவைச் சேர்ந்த மொடலிங் மங்கை நிமிஷாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் மகனான ஹம்சவர்தன் 1999 ஆம் ஆண்டில் வெளியான 'மானசீக காதல்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
திரையுலகில் நட்சத்திர நடிகராக முன்னேற முடியவில்லை என்றாலும் தனித்துவத்துடன் கூடிய நடிகராக உலா வந்த இவர், 'வடுகப்பட்டி மாப்பிள்ளை ' என்ற படத்தில் நடித்த போது உடன் நடித்த நடிகை ரேஷ்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இந்த தருணத்தில் 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக இவரது மனைவி உயிரிழந்தார்.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த மொடலிங் மங்கையான நிமிஷாவை காதலிக்க தொடங்கினார். ஹம்சவர்தன் தன்னுடைய திரையுலக வாழ்க்கை மீண்டும் பொலிவு பெறுவதற்காக தன்னுடைய பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் நிமிஷாவை சில தினங்களுக்கு முன் அவர்களுடைய பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது நடிகர் லியோ ஹம்சவிர்தன் இரண்டு திரைப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் , இதில் ஒரு படத்தினை தயாரித்து கதையின் நாயகனாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM