''தன்ஷிகாவின் சிரிப்பு பிடிக்கும். அவரை கடைசிவரை சந்தோசமாக வைத்து இருப்பேன். இனி மறைக்க எதுவும் இல்லை. நடிகர் சங்க கட்டட பணிகளை வேகப்படுத்த சொல்லிவிட்டேன்.. எனக்கு பெண் கிடைத்துவிட்டார்'' என நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
இதேவேளை, ''நடிகர் விஷாலை திருமணம் செய்யப்போகிறேன். அவர் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ல் திருமணம்'' என்று நடிகை சாய் தன்ஷிகாவும் அறிவித்துவிட்டார்.
இந்த காதல் மலர்ந்து எப்படி?
இந்த காதலுக்கு வயது என்ன என்று விசாரித்தால், இதுவரை ஒரு படத்தில் கூட இருவரும் இணைந்து நடித்தது இல்லை. இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு அதிகம் இல்லை. நடிகர் சங்க பணிகளில், விஷால் டீமில் தன்ஷிகா பணியாற்றியது இல்லை. சில மாதங்கள்தான் இவர்கள் காதலில் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் இணைய டி.ராஜேந்தர்தான் ஒரு காரணம்.
2017ம் ஆண்டு தன்ஷிகா நடித்த 'விழித்திரு' படவிழாவில் சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்தர் கலந்துகொண்டார். அந்த மேடையில் டி.ஆர் பெயரை மறந்து போய், அவரை குறிப்பிடாமல் பேசினார் தன்ஷிகா. அவ்வளவுதான் மேடை நாகரீகம் தெரியாதா? என்னை மதிக்காமல் இருப்பதா என மேடையிலேயே பொங்கி தன்ஷிகாவை திட்டி தீர்த்தார் டி.ஆர். அந்த மேடையில் கண்ணீர் விட்டு கதறி அழுதும், மன்னிப்பு கேட்டும் தன்ஷிகாவை டி.ஆர் மன்னிக்கவில்லை.
இந்த விவகாரம் பெரிதானது. தன்ஷிகாவுக்கு ஆதரவாக பல நடிகர், நடிகைகள் குரல்கள் கொடுத்தனர். அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஷால் தன்ஷிகாவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கைவிட்டார். அன்று முதல் நட்பு தொடங்கியது. பல பிரச்சினைகளில், நிகழ்ச்சிகளில் தன்ஷிகா வீட்டுக்கே விஷால் சென்று வந்துள்ளார். சில மாதங்களில் அது காதலாக மாறியுள்ளது என்கிறார்கள் விடயமறிந்தவர்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM