அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (20) பாராளுமன்றத்துக்கு அறிவித்தார்.
அதற்கமைய, முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த பின்னர், சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்மானிப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என உயர் நீதிமன்றம் கருதுவதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதுடன் அதன்படி, மனுதாரர் இந்த மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மனுவை மீளப்பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து, மனு தொடர்பான எதிர்வரும் நடவடிக்கைகளை முடிவுறுத்தி அதனைத் தள்ளுபடி செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு மேலும் உறுப்பினர்கள் நியமனம்
2025 மார்ச் 19ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120இன் ஏற்பாடுகளின் பிரகாரம், அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர மற்றும் முஜிபுர் ரஹுமான் ஆகியோர் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு மேலும் சில உறுப்பினர்கள் நியமனம்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111இன் ஏற்பாடுகள் மற்றும் 2025 மார்ச் 17ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக அந்தந்த துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பணியாற்றுவதற்காக பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
1. பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
• ஜீவன் தொண்டமான்
• சட்டத்தரணி அநுராத ஜயரத்ன
• சிவஞானம் சிறீதரன்
• சுரங்க ரத்நாயக்க
2. உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
• அஜித் பி. பெரேரா
• நலீன் பண்டார ஜயமஹ
• எஸ்.எம். மரிக்கார்
• ஜகத் விதான
3. கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
• வீ.எஸ். இராதாகிருஷ்ணன்
• ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி
• சானக மாதுகொட
• துரைராசா ரவிகரன்
4. சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
• சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர
• அமிர்தநாதன் அடைக்கலநாதன்
• இராமநாதன் அர்ச்சுனா
• சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே
5. சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
• ரோஹித அபேகுணவர்தன
• ஹெக்டர் அப்புஹாமி
• ஞானமுத்து ஸ்ரீநேசன்
• கிங்ஸ் நெல்சன்
6. விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
• சதுர கலப்பத்தி
• ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர்
7. ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
• ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா
• முஜிபுர் ரஹுமான்
அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது
பாராளுமன்ற நிலையியற்கட்டளை 112இன் ஏற்பாடுகள் மற்றும் 2025 மார்ச் 19ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரில் சேவையாற்றுவதற்காக, கீழே குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கு தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலினை மும்மொழியிலும் சபையில் சமர்ப்பிப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
• கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
• வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
• பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
• மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
• கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
• விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
• பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
• டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும்
• வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM