முதல் முறையாக இலங்கையில் இடம்பெறும் 80 ஆவது சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் பொதுச் சபை மற்றும் மாநாடு

Published By: Digital Desk 2

20 May, 2025 | 03:37 PM
image

இலங்கையில் முதல் முறையாக சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் (CISM) 80 ஆவது பொதுச் சபை மற்றும் மாநாடு கொழும்பில் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

கொழும்பு - 7 இல் அமைந்துள்ள கிராண்ட் மைட்லேண்ட் ஹோட்டலில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகர (ஓய்வு) தலைமையில் சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் (CISM) 80 ஆவது பொதுச் சபை மற்றும் மாநாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.

இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா (ஓய்வு), முப்படைகளின் தளபதிகளுடன் கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, ஜனாதிபதி பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு கவுன்சில் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ மற்றும் சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் (CISM ) தலைவர் கேர்னல் நில்டன் கோம்ஸ் ரோலிம் பில்ஹோ ஆகியோரின் வரவேற்பு உரைகளுடன் மாநாடு ஆரம்பமாகியது. 

அதைத் தொடர்ந்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட சிறப்புரை ஆற்றினார். 

இலங்கையில் முதல் முறையாக இடம்பெறும் 80 ஆவது சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் பொதுச் சபை மற்றும் மாநாட்டில், இலங்கை தன்னை இணைத்துக்கொண்டமையானது ஒரு சாதனையாகும் என்பதுடன் சிறந்த சந்தர்ப்பமாகும். 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்குப் பின்னர் உலகின் இரண்டாவது பெரிய விளையாட்டுக்கான மாநாடாக அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் (CISM) 80 ஆவது பொதுச் சபை மற்றும் மாநாட்டில், 4 கண்டங்களில் உள்ள 80 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். 

80 ஆவது பொதுச் சபை மற்றும் மாநாடு மே 19 திகதி முதல் 24 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறுகின்றது. 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் ( CISM ) மாநாடு கிராண்ட் மைட்லேண்ட் ஹோட்டலில் இடம்பெறுகின்றது. 23 ஆம் திகதி சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் ( CISM ) பொதுக் கூட்டம் மற்றும் நிறைவு விழா கிராண்ட் மைட்லேண்ட் ஹோட்டலில் இடம்பெறுகின்றது.

80 ஆவது பொதுச் சபையை நடத்தும் நாடான இலங்கை, நிகழ்வுகள் திட்டமிட்ட முறையில் இடம்பெறுவதை உறுதி செய்யும் வகையில், இலங்கை முப்படைகளின் உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவை நியமித்துள்ளது. அனைத்து விடயங்களும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு கவுன்சிலின் ஒருங்கிணைப்பின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. 

சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் (CISM) 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி பெல்ஜியம், டென்மார்க்,பிரான்ஸ், லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து நிறுவப்பட்டது. 

உலகெங்கிலும் உள்ள உறுப்பு நாடுகளின் ஆயுதப் படைகளிடையே "விளையாட்டு மூலம் நட்பை" வளர்ப்பதே சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் (CISM) இன் நோக்கமாகும். இலங்கை 1974 இல் இந்த அமைப்பில் உறுப்பினரானது. தற்போது, CISM நான்கு கண்டங்களில் 141 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு கவுன்சில் CISM இல் இலங்கை அதிகாரபூர்வ மற்றும் நிரந்தர பிரதிநிதியாக செயல்படுகிறது.

இலங்கை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு கவுன்சில் முப்படைகளுக்குள் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கு 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நிறுவப்பட்டது. தலைவர் மற்றும் செயலாளரின் பாத்திரங்கள் அந்தந்த தளபதிகள் மற்றும் விளையாட்டு பணிப்பாளர்களிடையே ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் சுழற்சி முறையில் வழங்கப்படும்.

2024/2025 ஆம் ஆண்டிற்கு இலங்கை விமானப்படை இந்தப் பொறுப்புகளை இலங்கை இராணுவத்திற்கு மாற்றியுள்ளது. இருப்பினும், உலக இராணுவ விளையாட்டு கவுன்சிலின் (CISM) பொதுச் சபை மற்றும் மாநாடு அதன் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாக செயல்படுகிறது. சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் CISM பொதுச் சபையை நடத்துவது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. ஏனெனில் இது இராணுவ விளையாட்டுகளை மேம்படுத்துவதுடன் சர்வதேச ஒத்துழைப்பு, இராஜதந்திரத்தை வளர்க்கிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள இராணுவ வீரர்களிடையே கலாச்சார பரிமாற்றம் மற்றும் சுமுகமான ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175...

2025-06-19 14:40:39
news-image

மூன்றாம் நாள் பகல் போசன இடைவேளையின்போது...

2025-06-19 12:25:11
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம்...

2025-06-19 05:57:18
news-image

மழையினால் இரண்டரை மணி  நேர தாமதத்தின்...

2025-06-19 05:54:08
news-image

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு லங்கா...

2025-06-18 14:14:33
news-image

பலம் வாய்ந்த நிலையில் பங்களாதேஷ்

2025-06-18 12:26:58
news-image

ஐ லீக் கால்பந்தாட்டத்தின் முதலாம் கட்ட...

2025-06-17 21:50:43
news-image

அணித் தலைவர் ஷன்டோ, முன்னாள் தலைவர்...

2025-06-17 19:32:38
news-image

அணித் தலைவர் சன்டோ, ரஹிம் ஆகியோர்...

2025-06-17 14:57:43
news-image

டெஸ்ட் அறிமுகம் பெற்றனர் லஹிரு உதார,...

2025-06-17 12:22:55
news-image

மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு SLC...

2025-06-17 12:13:14
news-image

அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றைப் போன்று...

2025-06-17 01:25:54