போர் வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்திய மஹிந்த, கோட்டா

Published By: Digital Desk 3

20 May, 2025 | 01:29 PM
image

முப்பது வருடகால யுத்தத்தில் உயிரிழந்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் பாராளுமன்ற மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள போர்வீரர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் நடைபெற்றது. 

இதன் போது கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

“இன்று நாங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக வந்தோம். ஆம், சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தோம்.

யாரையும் பிடிப்பதற்காக அல்ல. நாட்டைப் பாதுகாப்பதற்காகவே யுத்தம் செய்தோம்.

எதிர்காலத்தில் இவை மீண்டும் நடைபெறுமா? இல்லையா? என்பதைச் சொல்ல முடியாது. அது வரும் அரசாங்கங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

யுத்தம் என்பது ஒரு துயரச் சம்பவம். ஆனால், எங்கள் இராணுவம் வெற்றி பெற்றது. யுத்தத்தில் ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டும் தானே.

நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி இதன்போது எழுப்பியிருந்தார்.

மஹிந்த – தேசிய பாதுகாப்பு? அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாட்டைப் பாதுகாக்க வேண்டும்…” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது...

2026-08-08 14:56:36
news-image

இரத்மலானையில் ஆயுதங்கள், கைக்குண்டு மற்றும் பணத்துடன்...

2026-08-08 14:36:20
news-image

பதுளையில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில்...

2026-08-08 13:20:57
news-image

உயர்தர பரீட்சார்த்திகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...

2026-08-08 13:56:21
news-image

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்

2026-08-08 13:51:43
news-image

கட்டானையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்...

2026-08-08 13:20:07
news-image

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர்...

2026-08-08 13:47:48
news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51