இலங்கையின் ஓட்ட வீரர் பிரதீப்குமார்  ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளதாக இலங்கையின் ஊக்கமருத்து ஒழிப்பு நிறுவனத்தின் செயலாளர் வைத்தியர் சீவலி தெரிவித்தார்.

இதையடுத்து பிரதீப்குமாருக்கு போட்டிகளில் கலந்துகொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

பிரதீப் குமாரின் சிறுநீர் பரிசோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் சம்மதத்துடன் இரத்தப் பரிசோதனை மேற்கொண்டு இறுதி முடிவு எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இறுதி முடிவு எட்டப்படும் வரை அவர் மீதான தடை நடைமுறைப்படுத்தப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.