காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தினால் கடும் நடவடிக்கை - பிரிட்டன், பிரான்ஸ், கனடா கூட்டாக எச்சரிக்கை

20 May, 2025 | 11:51 AM
image

காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை மேலும் மோசமான விதத்தில் விரிவுபடுத்தினால், உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிவரும் என பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட்டாக எச்சரித்துள்ளன.

பிரிட்டிஸ் பிரதமர் பிரான்ஸ் கனடா தலைவர்கள் இணைந்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன்,இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும்,மனிதாபிமான உதவிகள் காசாவிற்குள் செல்வதற்கு உடனடியாக அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இஸ்ரேல் 11 வாரகால முற்றுகை மற்றும் தடையின் பின்னர் அடிப்படை எண்ணிக்கையிலான உணவுகளை காசாவிற்குள் அனுமதிக்கும் எனஇஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

எனினும் இது போதுமானதல்ல என தெரிவித்துள்ள மேற்குலகின் மூன்று தலைவர்களும் பொதுமக்களிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது இது சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறுவதற்கு ஒப்பானது என தெரிவித்துள்ளனர்.

காசாவில் காணப்படும் துன்பத்தின் அளவு சகித்துக்கொள்ள முடியாததாக உள்ளது என தெரிவித்துள்ள அவர்கள், ஹமாஸ் தன்னிடம் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு...

2025-06-16 08:43:45
news-image

இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான்...

2025-06-16 08:05:56
news-image

ஈரானின் ஆன்மீகதலைவர் கமேனியை கொலை செய்யும்...

2025-06-16 07:58:13
news-image

இந்தியா ; புனேவில் பாலம் இடிந்து...

2025-06-15 17:36:31
news-image

இறுதி சடங்கில் உயிரோடு எழுந்த வயோதிபர்

2025-06-15 14:55:02
news-image

புற்றுநோயால் தாய் மரணம்; விமான விபத்தில்...

2025-06-15 14:07:49
news-image

இஸ்ரேலை கண்டிக்கும் எஸ்சிஓ அறிக்கை விவாதத்தில்...

2025-06-15 13:31:43
news-image

பிரித்தானிய போர் விமானம் கேரளாவில் அவசரமாக...

2025-06-15 12:49:32
news-image

ஈரானுடன் ஒருங்கிணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல்...

2025-06-15 12:38:36
news-image

மிகவும் துயரமான கடினமான காலைப்பொழுது -...

2025-06-15 12:14:28
news-image

இந்தியாவில் ஹெலிகொப்டர் விபத்து - 7...

2025-06-15 10:30:20
news-image

டுபாயில் 67 மாடி கட்டிடத்தில் பாரிய...

2025-06-15 12:09:04