Intel மற்றும் AMD புரொசசர்களுடன் கூடிய தெரிவு செய்யப்பட்ட HP மடிகணனிகளுக்காக மூன்று வருடத்திற்கான விசேட உத்தரவாதத்தினை HP இலங்கையில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ விற்பனையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்வதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. தயாரிப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் முக்கிய நன்மைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது. இதன் மூலம் HP மடிகணனியில் முதலீடு செய்வது நிதி ரீதியாக மிக சிறப்பு வாய்ந்ததாகவும் பாதுகாப்பு வாய்ந்த ஒன்றாகவும் மாற்றுகிறது.
இந்த விசேட உத்தரவாதம் மூலம், உரிய அசல் உதிரிப்பாகங்கள், அசல் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் சான்றளிக்கப்பட்ட சேவை, பொறியாளர்களின் தொழில்முறை தொழில்நுட்ப உதவிகளை அடையலாம்.
HP இன் அங்கீகாரம் பெற்ற கூட்டாளர்களான Abans மற்றும் Singhagiri ஆகியன மாணவர்களும் இளம் தொழில்முனைவோர்களும் அசல் HP மடிகணனிகளை எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையில், வசதியான கொடுப்பனவு வசதிகளை வழங்குகின்றன.
Abans காட்சியறைகள் மூலம் கடனட்டை இன்றி, மாதாந்த தவணைக் கட்டணமாக ரூ. 7,400 முதல் 24 மாத தவணை திட்டங்களை தெரிவு செய்யலம். தெரிவு செய்யப்பட்ட வங்கிகளின் கடனட்டைகளுக்கு 60 மாதங்கள் வரை 0% வட்டி, அத்துடன் இலவசமாக earbuds மற்றும் headphones ஆகியனவும் வழங்கப்படும்.
அதே போன்று Singhagiri காட்சியறைகளில், கடனட்டைகள் மூலம் 60 மாதங்கள் வரையான தவணைக் கட்டண திட்டங்கள், 24 மாதங்கள் வரையான 0% வட்டி திட்டங்கள், 18 மாத எளிய பணம் செலுத்தும் தவணை திட்டங்கள், மற்றும் KOKO மூலமாக 3 தவணைகளாக செலுத்தும் வசதி மூலம் கொள்வனவு செய்ய முடியும்.
மேலும், அசல் HP மடிகணனிகளை கொள்வனவு செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் HP மடிகணனி பை (backpack), HP 150 WD USB-A விசைப்பலகை (keyboard), HP 240 BT மவுஸ் (mouse) ஆகியவற்றைக் கொண்ட விசேட தொகுதியும் வழங்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM