(நெவில் அன்தனி)
லக்னோவ் எக்கானா விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (19) இரவு மின்னொளியில் நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 61ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை 6 விக்கெட்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றிகொண்டது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸின் ப்ளே ஓவ் வாய்ப்பு பறிபோனது.
அத்துடன் ப்ளே ஓவ் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் தகுதிபெற்ற நிலையில் இந்தப் போட்டி முடிவுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டன.
ப்ளே ஓவ் சுற்றுக்கு தகுதிபெறப்போகும் நான்காவது அணிக்கான போட்டி மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் டெல்ஹி கெப்பிட்டல் அணிக்கும் இடையில் நிலவுகிறது.
திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.
மிச்செல் மார்ஷ், ஏய்டன் மார்க்ராம் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 63 பந்துகளில் 115 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
மிச்செல் மார்ஷ் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 65 ஓட்டங்களையும் ஏய்டன் மார்க்ராம் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்கள் இருவரைவிட நிக்கலஸ் பூரண் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். அவர் 45 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ஏஷான் மாலிங்க 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஏற்கனவே ப்ளே ஒவ் வாய்ப்பை இழந்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபத்துக்கு இந்த வெற்றி ஆறுதல் அளித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அபிஷேக் ஷர்மா குவித்த அதரடி அரைச் சதம், இஷான் கிஷான், ஹென்றிச் க்ளாசன், கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்கள் என்பன சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வெற்றி அடையச் செய்தன.
அபிஷேக் ஷரமா 4 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களையும் ஹென்றிச் க்ளாசன் 47 ஓட்டங்களையும் இஷான் கிஷான் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது உபாதை காரணமாக ஓய்வுபெற்றார்.
பந்துவீச்சில் திக்வேஷ் ரதி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: அபிஷேக் ஷர்மா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM