தற்போதுள்ள கல்வி முறையை படிப்படியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர்

Published By: Vishnu

19 May, 2025 | 07:57 PM
image

பாதுக்க, போபே ராஜசிங்க மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற  சபாபீடத்தில்  நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் 'விஷன்' நிகழ்ச்சித் தொடருடன்  இணைந்ததாக போபே ராஜசிங்க கல்லூரி இந்த வாய்ப்பைப் பெற்றது.

இதற்கு பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றிய பிரதமர், ஒரு நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட, செயற்திறன்மிக்க பிரஜைகளை உருவாக்க வேண்டும் என்றும், செயற்திறன்மிக்க பிரஜைகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும், தற்போதுள்ள கல்வி முறையை படிப்படியாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து, மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பிரதமர் பதிலளித்தார்.

போபே ராஜசிங்க மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, எதிர்காலத் தலைமைத்துவம், பாராளுமன்ற மரபின் வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின் 

வகிபாகம் குறித்து பாராளுமன்ற பணியாட்டொகுதிப் பிரதானி, பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி  சமிந்த குலரத்ன விளக்கமளித்தார். 

மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு தொடங்கியதைத் தொடர்ந்து,  சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்தல், உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்தல்  என்பன இடம்பெற்றது. 

பின்னர், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இலங்கை வங்கிக் கணக்குகளும் திறக்கப்பட்டன.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே.எம்.என். குமாரசிங்க, பாதுக்க வலயக் கல்விப் பணிப்பாளர் நெரஞ்சி குலரத்ன, போபே மகா வித்தியாலய அதிபர் சரத் குமார, ஜனாதிபதி அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பொது மக்கள் சேவை அதிகாரி துமிந்த விக்ரமரத்ன மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30
news-image

சிறைச்சாலைகளில் கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக...

2026-08-09 14:57:24
news-image

சிறை மோதலுக்கு எதிர்க்கட்சிகளை குறை கூறுவது...

2026-08-09 15:25:39
news-image

ஜே.ஆரின் அரசியலமைப்புக்கு அரசாங்கம் மேலும் வலு...

2026-08-09 14:48:04