நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை (16) கொடியேற்றத்துடன் ஆரம்பமானதைத் தொடர்ந்து, நேற்று (18) தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
சனிக்கிழமை (17) புண்ணியவாசகம் கிரியையுடன் பால்குட பவனி நடைபெற்று, பிற்பகல் மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (18) காலை பக்தர்களால் காவடி எடுக்கப்பட்டு, பறவை காவடி, கற்பூர சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பின்னர் பிற்பகல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, திருவிளக்கு பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை நடத்தப்பட்டது.
பின்னர், அலங்கார தீப ஆராதனை நடைபெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க, தேவார பாராயணங்கள் ஒலிக்க, விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய மூன்று தெய்வங்களும் வெளி வீதியூடாக நுவரெலியா பிரதான நகரில் தேரில் வலம் வந்தனர்.
இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வருகைதந்த பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (19) மாலை பச்சை சாத்துதல், மாவிளக்கு பூஜையுடன் பூங்காவன பூஜை நடைபெறவுள்ளது,
இதனை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (20) தீர்த்த உற்சவமும் கரகம் வீதி உலாவும் நடைபெற்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM