அரசாங்க உத்தியோகத்தர்கள் கண்ணியமாகவும் ஒழுக்கத்துடனும் உடையணிந்து வரவேண்டும் என உகாண்டா அரசாங்கம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறிப்பாக பெண்கள் மார்பகங்களை மறைக்கும் வகையில் உடையணிந்து தொழிலுக்கு வரவேண்டும் என்றும் உகண்டா அரசாங்கத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவு அரச உத்தியோகத்தில் கடமை புரியும் பெண்களை இலக்குவைத்தே  இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எண்ணத்தேன்றுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

முழங்காலுக்கு மேலாக இருக்கும் குட்டைப் பாவாடைகளை அணிந்து பெண் ஊழியர்கள் சமுகமளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பளிச்சென்று இருக்கும் வர்ணங்களில் தலைமுடியை ஒய்யாரமாக பின்னிக்கொண்டு வேலைக்கு வரவேண்டாம் எனவும் உகண்டா அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல் ஆடவர்கள் தலைமுடியை ஒட்டவெட்டி, தலைச்சாயம் மற்றும் கோட் அணிந்து வேலைக்கு வரவேண்டும். ஆனால் கண்ணைப்பறிக்கும் வர்ணத்தில் உடை அணிந்து வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்கள் கையில்லாத சட்டை அணிவது, உள்ளாடைகள் தெரியும் வகையில் உடையணிவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் மார்பகங்கள், தொப்புள், முழங்கால் மற்றும் பின்புறங்கள் தெரியாத வகையில் ஆடை அணிந்து கடமைக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நகங்களை மூன்று செ.மீ நீளத்துக்கு மேல் வளர்க்கக் கூடாது என்றும் உகண்டா அரசாங்கம் எச்சரித்துள்ளது.

நகம் நீளமாக இருக்க கூடாது என்றும் பூச்சு ஒரே வண்ணத்தில் இருக்க வேண்டும் எனவும் பல வர்ணங்களில் நகப்பூச்சு அணிந்து வருவது அரச அலுவலகங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

அரசு பணியில் உள்ள பெண்கள் முக அலங்காரத்தை எளிமையாக செய்துகொள்ளவும், ஆண் பணியாளர்கள் தலைமுடியை ஒட்டவெட்டியிருக்கவும் உகண்டா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.