உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து ஐ.தே .க. - ஐ.ம.ச. இடையில் இணக்கப்பாடு

Published By: Digital Desk 3

19 May, 2025 | 03:54 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைக்க இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம் என  ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் தலதா அத்துகோரள மற்றும்  ஐக்கிய மக்கள்  சக்தியின் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோர் இணைந்து திங்கட்கிழமை (19) வெளியிட்டுள்ள கூட்டு  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கிய உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் திங்கட்கிழமை விசேட  கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதன்பிரகாரம் இது தொடர்பான கொள்கை ரீதியிலான விடயங்கள் தொடர்பில் விசேடமாக கலந்துரையடப்பட்டது. அத்துடன், எதிர்க்கட்சியின்  ஏனைய தரப்பினருடன் இணைந்து இந்த சபைகளில் ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம் என இரு  தரப்பு சார்பாகவும்  இணைந்து  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாத  உள்ளூராட்சி மன்றங்களில்  எதிர்கட்சிகள்  ஒன்றிணைந்து எதிர்க்கட்சி  உறுப்பினர் ஒருவரை அந்த சபையின்  மேயர் அல்லது தலைவராக நியமித்துக்கொண்டு, ஆட்சியமைப்பது தொடர்பான  கலந்துரையாடல் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன்  மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.

அதன் பிரகாரம் திங்கட்கிழமை எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன்  கலந்துரையாடப்பட்டது.  இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய  கட்சி  சார்பாக கட்சியின் செயலாளர்  தலதா அத்துகோரள, பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன, தவிசாளர் வஜிர அபேவர்த்தன  மற்றும் தேசிய  அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தி  சார்பில் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதிச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், கட்சியின் சிரேஷ் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல  ஆகியோரும்  கலந்துகொண்டிந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47