டெல்ஹியை வீழ்த்தி ப்ளே ஓவ் சுற்றில் முதல் அணியாக நுழைந்தது குஜராத்; சாய், கில் துடுப்பாட்டத்தில் அபாரம், ராகுலின் சதம் வீண்போனது

Published By: Vishnu

19 May, 2025 | 05:05 AM
image

(நெவில் அன்தனி)

டெல்ஹி, அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 60ஆவது போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸை 10 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்ட குஜராத் டைட்டன்ஸ் முதலாவது அணியாக ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

சாய் சுதர்சன் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம், அணித் தலைவர் ஷுப்மான் கில் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன குஜராத்தை மிக  இலகுவாக  வெற்றிபெறச் செய்தன.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் சார்பாக கே. எல். ராகுல் குவித்த ஆட்டம் இழக்காத சதம் இறுதியில் வீண் போனது.

சாய் சுதர்சன், ஷுப்மான் கில் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 205 ஓட்டங்கள், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஆரம்ப விக்கெட்டுக்கான இரண்டாவது மிகச் சிறந்த இணைப்பாட்டமாகும்.

கே.எல். ராகுல், குவின்டன் டி கொக் ஆகிய இருவரும் 2022இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பிரிக்கப்படாத ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 210 ஓட்டங்களும் ஷுப்மான் கில், சாய் சுதர்சன் ஆகிய இருவரும் கடந்த வருடம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக   பகிர்ந்த 210 ஓட்டங்களுமே ஆரம்ப விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டங்களாகும்.

டெல்ஹி கெப்பிட்டல்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 200 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 205 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

திறமையாகவும் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடிய சாய் சுதர்சன் 61 பந்துகளில் 12 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 108 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார். 

தனது 37ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சாய் சுதர்சன் குவித்த இரண்டாவது சதம் இதுவாகும்.

ஆரம்பத்தில் நிதானத்துடனும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடிய ஷுப்மான் கில் 53 பந்துகளில் 3 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 93 ஓட்டங்களைப் பெற்றார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது.

கே. எல். ராகுல் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 65 பந்துகளில் 14 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 112 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

கே. எல். ராகுல் 2ஆவது விக்கெட்டில் அபிஷேக் பொரெலுடன் 100 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் அக்சார் பட்டேலுடன் 45 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸுடன் 48 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

அபிஷேக் பொரெல் 30 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் 25 ஓட்டங்களையும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆட்டநாயகன்: சாய் சுதர்சன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44