(நெவில் அன்தனி)
ஜெய்ப்பூர் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 59ஆவது போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸை 10 ஓட்டங்களால் வெற்றிகொண்ட பங்சாப் கிங்ஸ், ப்ளே ஒவ் வாய்ப்பை அண்மித்துள்ளது.
நெஹால் வதேராவின் அபார அரைச் சதமும் ஹாப்ரீட் ப்ரரின் துல்லியமான பந்துவீச்சும் பஞ்சாப் கிங்ஸை வெற்றிபெறச் செய்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது.
ப்ரியான் ஆரியா (9), மிச்செல் ஒவென் (0), ப்ரப்சிம்ரன் சிங் (21) ஆகிய மூவரும் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
எனினும் மத்திய வரிசையில் நெஹால் வதேரா, அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், ஷஷாங் சிங், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஆகிய நால்வரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பஞ்சாப் கிங்ஸ் 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
நெஹால் வதேராவும் ஷ்ரேயாஸ் ஐயரும் 4ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களையும் நெஹால் வரோ, ஷஷாங் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெடடில் 58 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.
நெஹால் வதேரா 37 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 70 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
தொடர்ந்து ஷஷாங் சிங், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
ஷஷாங் சிங் 30 பந்துகளில் 69 ஓட்டங்களுடனும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 9 பந்துகளில் 21 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்தவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
220 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
யஷஸ்வி ஜய்ஸ்வால், வைபவ் சூரியவன்ஷி ஆகிய இருவரும் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் சிரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த ராஜஸ்தான் றோயல்ஸ் 11 ஓட்டங்களால் வெற்றி இலக்கை அடையத் தவறியது.
ஜய்ஸ்வால் 50 ஓட்டங்களையும் சூரியவன்ஷி 40 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் த்ருவ் ஜுரெல் 53 ஓட்டங்களையும் அணித் தலைவர் சஞ்சு செம்சன் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஹாப்ரீட் ப்ரார் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகன்: ஹாப்ரீட் ப்ரார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM