(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் ஏழாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (18) 22 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இலங்கைக்கு 6 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
இந்த 6 பதக்கங்களுடன் இலங்கை இதுவரை 11 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
தொடரவுள்ள அரை இறுதிப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள இலங்கை வீர, வீராங்கனைகளுக்கும் பதக்ககங்கள் உறுதியாகியுள்ளன. அவர்களில் மூவர் நேரடியாக இறுதிப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளதால் அவர்களுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இன்று நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை வீராங்கனைகளில் பெர்னாண்டோ இரட்டை சகோதரிகளான சச்சினி, யசினி ஆகிய இருவரே மூன்று சுற்றுகளும் தாக்குப் பிடித்தனர்.
சச்சினி 50 கிலோ கிராம் எடைப் பிரிவிலும், யசினி 52 கிலோ கிராம் எடைப் பிரவிலும் சிறப்பாக போட்டியிட்டனர்.
50 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் வியட்நாம் வீராங்கனை எங்குயென் தி எங்கொக் ட்ரானை எதிர்த்தாடிய சச்சினி பெர்னாண்டோ 3 சுற்றுகளும் தாக்குப் பிடித்து சண்டையிட்டார்;.
ஆனால், 5 மத்தியஸ்தர்களின் புள்ளிகளின் அடிப்படையில் 0 - 5 (26 - 30, 24 - 30, 26 - 30, 24 - 30, 26 - 30) என சச்சினி தோல்வி அடைந்தார்.
52 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் பலசாலியான கஸக்ஸ்தான் வீராங்கனை மிர்ஸாக்குல் டொம்ரிஸ் என்வருக்கு ஈடுகொடுத்து போட்டியிட்ட யசினி பெர்னாண்டோ 3 சுற்றுகளும் தாக்குப் பிடித்து தோல்வி அடைந்தார்.
அப் போட்டியில் 0 - 5 (27 - 30, 26 - 30, 26 - 30, 24 - 30, 26 - 30) என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் யசினி தோல்வி அடைந்தார்.
22 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 48 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் சர்வதேச குத்துச் சண்டை கொடியின்கீழ் நடுநிலையாளராக பங்குபற்றிய இந்தியாவின் மாஹி சிவாச்சியின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை வீராங்கனை நெத்மி பெரேரா இரண்டாம் சுற்றில் நிலைகுலைந்து போனார். இதன் காரணமாக போட்டியை இரண்டாம் சுற்றுடன் மத்தியஸ்தர் முடிவுக்கு கொண்டுவந்து மாஹி சிவாச்சிக்கு வெற்றியை அளித்தார்.
54 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் வியட்நாம் வீராங்கனை எங்கோ தி மாய் ச்சுக்கின் நுட்பத்திறனுடனான தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல் சுற்றிலேயே சந்தீப்பனி காரியவசம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
இலங்கை குத்துச்சண்டை அணியில் இடம்பெற்ற வவுனியாவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான உதயகுமார் கீர்த்தனா, 54 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதியில் கஸக்ஸ்தான் வீராங்கனை துர்சின்பெக் அனாரிடம் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினார்.
இலங்கை சார்பாக இன்றைய தினம் கடைசியாக போட்டியிட்ட தெவ்மி சஞ்சனா 66 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதியில் முதல் சுற்றுடன் தோல்வி அடைந்தார்.
சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் கொடியின் கீழ் நடுநிலையாளராக பங்குபற்றிய இந்தியாவின் ஹிமான்ஷியின் சரமாரியான தாக்குதல்களில் தெவ்மி சஞ்சனா தடுமாற்றம் அடைந்து தோல்வியைத் தழுவினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM