அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலுடன் லொறியொன்று விபத்திற்குள்ளானதில் லொறிச் சாரதி சிறுகாயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று காலை புவக்பிட்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

ரயில் வீதிக்கு குறுக்காக உள்ள வீதியில், குறித்த லொறி செல்ல முற்பட்ட போதே  இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் விபத்துடன்  தொடர்புடைய லொறிச் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.