'ஏஸ்' படத்தில் யோகி பாபு மற்றொரு ஹீரோ - விஜய் சேதுபதி

Published By: Digital Desk 2

18 May, 2025 | 06:16 PM
image

தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆறுமுக குமார் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஏஸ்' திரைப்படத்தில்-  யோகி பாபு மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கிறார் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 23ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் விஜய் சேதுபதி நடிக்கும்' ஏஸ் ' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.

இதில் விஜய் சேதுபதி பேசுகையில், '' இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மலேசியாவில் நடைபெற்றது. ரசிகர்களை கவரும் வகையிலான கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் யோகி பாபு மற்றொரு ஹீரோவாக நடித்திருக்கிறார். அவர் மிகவும் நல்லவர். அவருடைய கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு பிடிக்கும். ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் பாடல்களும் பிடிக்கும் ''என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுமுக நடிகர் வினோத் நடிக்கும் '...

2025-06-19 16:58:11
news-image

திரைப்படமாகும் சாம்பாராக் இசையின் பிதாமகன் டார்க்கி...

2025-06-19 16:57:42
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'காயல் '...

2025-06-19 16:35:31
news-image

டொம் க்ரூஸூக்கு ஒஸ்கார் விருது 

2025-06-19 15:36:01
news-image

அனிருத் வெளியிட்ட 'ஓஹோ எந்தன் பேபி...

2025-06-18 16:59:54
news-image

'மெட்ராஸ் மேட்னி' படத்திற்கு தொடர்ந்து ஆதரவு...

2025-06-18 16:18:04
news-image

அறிவியல் சார்ந்த குற்ற புலனாய்வு வகைமையில்...

2025-06-18 15:49:45
news-image

பிரபல ஹொலிவுட் நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ்...

2025-06-18 11:06:34
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியுடன் இணைந்த...

2025-06-17 16:33:32
news-image

டிஸ்னி- பிக்ஸார் நிறுவனத்தின் 'எலியோ' படத்தின்...

2025-06-17 16:02:32
news-image

விமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு...

2025-06-17 16:02:06
news-image

பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் இலங்கை...

2025-06-17 13:25:33