ஜோரா கைய தட்டுங்க - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

18 May, 2025 | 06:15 PM
image

தயாரிப்பு : வாமா என்டர்டெய்ன்மென்ட்

நடிகர்கள் : யோகி பாபு, சாந்தி ராவ் ஹரிஷ் பெராடி, 'அருவி'பாலா, கல்கி மற்றும் பலர்

இயக்கம் : வினீஷ் மில்லேனியம்

மதிப்பீடு: 2/5

தமிழின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகராக வலம் வரும் யோகி பாபு - அவ்வப்போது சில திரைப்படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றி கண்டிருக்கிறார். இந்த தருணத்தில் கதாநாயகனாக அவர் நடித்திருக்கும் திரைப்படம் 'ஜோரா கைய தட்டுங்க' . இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

மேஜிக் கலைஞரின் வாரிசான யோகி பாபு, அந்தக் கலையை முழுவதுமாக கற்றுக் கொள்ளாமல் மேடை ஏறுகிறார். இதனால் அவருக்கு அவமானம் நேரிடுகிறது. இருந்தாலும் எதிர்காலத்தில் தந்தையின் பெயரை உச்சரிக்கும் படி நல்லதொரு மேஜிக் கலைஞராக வரவேண்டும் என விரும்புகிறார். 

இந்நிலையில் இவருக்கும் சிறுமி ஒருவருக்கும் இடையே அறிமுகமும், நட்பும் உருவாகிறது. இந்தத் தருணத்தில் இந்த சிறுமி மர்மமான முறையில் இறந்து விடுகிறார். இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொள்கிறது. யோகி பாபு மீது சந்தேகம் இருப்பதால் அவரையும் காவல்துறையினர் வழக்கமான துன்புறுத்தலுடன் விசாரிக்கிறார்கள்.

இந்த தருணத்தில் சிறுமியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கும்பலில் உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணம் அடைகிறார்கள்.  இதன் பின்னணியில் இருப்பவர் யார்?  அவரை ஆதாரங்களுடன் காவல் துறையினரால் கைது செய்ய முடிந்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.

யோகி பாபு மேஜிக் கலைஞராக நடித்திருக்கிறார். முதன்முறையாக இந்த திரைப்படத்தில் தான் யோகி பாபு குளோசப் காட்சிகளில் ரசிகர்களை பயமுறுத்தாமல் அழகாக தோன்றுகிறார். இதற்காகவே ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வழக்கமான பழிக்கு பழிவாங்கும் கதை என்றாலும் மலையாள தேசத்து படைப்பாளிகளால் உருவாக்கப்பட்டிருப்பதால் அந்த மண்ணிற்கே உரிய இயல்பாக திரைக்கதை நகர்வதால்  பரபரப்பையும் வித்தியாசமான திருப்பத்தையும் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கிறது.  இருந்தாலும் யோகி பாபு கதாநாயகன் என்பதால் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பொதுவாக மேஜிக் கலைஞருக்கென ஒரு பிரத்யேக உடல் மொழி இருக்கும். அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.

யோகி பாபுவின் காதலியாக திரையில் தோன்றும் நடிகை சாந்தி ராவ்-வின் கதாபாத்திரத்தை ரசிகர்களால் ஏற்க முடிந்தாலும் அவர்களது காட்சி அதிகம் இல்லாததால் கவனத்தை கவர தவறுகிறார். 

கதையின் நாயகன் வாழ்க்கையில் இலட்சியத்தில் தோல்வி அடைந்தவர் என்பது வலுவாக திரைக்கதையில் பேசப்பட்டிருப்பதால் அவர் பழிவாங்கும் போது ரசிகர்களிடத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதிலும் பழிவாங்கும் காட்சிகள் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இல்லாதது பெருங்குறை.

படத்திற்கு ஆக பெரும் பலமாக இருப்பது ஒளிப்பதிவு மட்டுமே. இதனால் ஒளிப்பதிவாளரை மட்டுமே பாராட்டலாம்.  இதுபோன்ற கிரைம் திரில்லர் திரைப்படங்களுக்கு பின்னணி இசை பார்வையாளர்களை ஓரளவிற்காவது அச்சப்பட செய்வது போல் இருக்கும். அதுவும் இப்படத்தில் மிஸ்ஸிங்.

ஜோரா கைய தட்டுங்க - ஒரு கை ஓசை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுமுக நடிகர் வினோத் நடிக்கும் '...

2025-06-19 16:58:11
news-image

திரைப்படமாகும் சாம்பாராக் இசையின் பிதாமகன் டார்க்கி...

2025-06-19 16:57:42
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'காயல் '...

2025-06-19 16:35:31
news-image

டொம் க்ரூஸூக்கு ஒஸ்கார் விருது 

2025-06-19 15:36:01
news-image

அனிருத் வெளியிட்ட 'ஓஹோ எந்தன் பேபி...

2025-06-18 16:59:54
news-image

'மெட்ராஸ் மேட்னி' படத்திற்கு தொடர்ந்து ஆதரவு...

2025-06-18 16:18:04
news-image

அறிவியல் சார்ந்த குற்ற புலனாய்வு வகைமையில்...

2025-06-18 15:49:45
news-image

பிரபல ஹொலிவுட் நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ்...

2025-06-18 11:06:34
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியுடன் இணைந்த...

2025-06-17 16:33:32
news-image

டிஸ்னி- பிக்ஸார் நிறுவனத்தின் 'எலியோ' படத்தின்...

2025-06-17 16:02:32
news-image

விமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு...

2025-06-17 16:02:06
news-image

பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் இலங்கை...

2025-06-17 13:25:33