(எம்.மனோசித்ரா)
கொடூரமான 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வந்து தாயகத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து விடுவித்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தாய் நாட்டுக்காக தமது உயிரை தியாகம் செய்த, அங்கவீனமுற்ற சகல பாதுகாப்பு படை வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகால கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டு வந்து, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மலைநாட்டை ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்து, நமது தாயகத்தையும் மக்களையும் கொடூரமான புலி பயங்கரவாத அமைப்பிலிருந்து விடுவித்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்த நோக்கத்திற்காக தங்கள் கண்கள், காதுகள், சதை, இரத்தம், வியர்வை மற்றும் தங்கள் உயிரைக் கூட தியாகம் செய்த அனைவருக்கும், இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகளின் மாவீரர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM