தயாரிப்பு : நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் & தி ஷோ பீப்பிள்
நடிகர்கள் : சந்தானம், கீதிகா திவாரி செல்வராகவன் கௌதம் வாசுதேவ் மேனன் நிழல்கள் ரவி மொட்டை ராஜேந்திரன் மாறன் கஸ்தூரி ரெடின் கிங்ஸ்லி யாஷிகா ஆனந்த் மற்றும் பலர்.
இயக்கம் : எஸ். பிரேம் ஆனந்த்
மதிப்பீடு : 2.5/5
பெயர் தொடர்பான சர்ச்சை, பாடல் வரிகள் தொடர்பான சர்ச்சை, பாடல் நீக்கம், அதன்பிறகு மறு தணிக்கை, என பல்வேறு எதிர்பாராத தடங்கல்களை எதிர்கொண்டு திட்டமிட்ட திகதியில் தவறாமல் ரசிகர்களை திரையில் சந்தித்திருக்கும் சந்தானத்தின் புதிய திரைப்படம் ' டெவில்ஸ் நெக்ஸ்ட் டபுள் லெவல்' . தன்னுடைய சினிமா வெற்றிக்காக பேயை உறுதியாக நம்பும் சந்தானத்தை நான்காவது முறையாகவும் பேய் காப்பாற்றி இருக்கிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
கிஸ்ஸா 47 எனும் பெயரிலான டிஜிட்டல் தளத்தில் தமிழ் திரை உலகில் வெளியாகும் திரைப்படங்களை கிருஷ்ணா (சந்தானம்) விமர்சிக்கிறார்.
இவருடைய எதிர்மறையான விமர்சனத்தால் படைப்பாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்தத் தருணத்தில் டிஜிட்டல் ஊடக திரை விமர்சகரான கிஸ்ஸா வை, திரைப்பட இயக்குநர் 'ஹிச்சுகொக் ' இருதயராஜ் என்பவர் பிரத்யேக திரையிடலுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் பங்கு பற்றுமாறு அழைப்பு விடுக்கிறார்.
இந்த அழைப்பினை ஏற்றுகொள்ளும் கிருஷ்ணா, தன் குடும்ப உறுப்பினர்களுடன் ( காதலி, தங்கை, பெற்றோர்கள், பிள்ளைகள்) ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில் உள்ள பட மாளிகைக்கு உற்சாகமாக செல்கிறார் . அவருடைய எதிர்பார்ப்பிற்கு மாறாக படமாளிகை அனுபவங்கள் ஏற்படுகிறது.
இது குடும்ப உறுப்பினர்களுக்கும் நிகழ்வதால் தனக்கு என்ன நேர்கிறது? என்பதனை கிருஷ்ணாவால் துல்லியமாக அவதானிக்க இயலவில்லை. அதன் பிறகு சுதாரித்து தம்முடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அந்த திரைப்பட இயக்குநர் விரித்த வலையில் சிக்கியிருப்பதை உணர்கிறார். இதற்கான பின்னணி என்ன? என்பதனையும்.. குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதையும் ஜாலியாக விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
திரைப்படத்திற்குள் ஒரு திரைப்படம் என்ற திரைக்கதை உத்தி தொடக்கத்தில் 'உச்சு 'கொட்ட வைக்கிறது. அதன் பிறகு அதுவே சிரிப்பதற்கும் சிறிது இடம் அளிக்கிறது. படத்தில் கவர்ந்த அம்சம் இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனனும் யாஷிகா ஆனந்தும் ' காக்க காக்க ..' படத்தின் பாடல் காட்சிகளில் திரையில் தோன்றுவது தான்.
உரையாடல்களில் சில இடங்களில் மட்டுமே புன்னகை உண்டாகிறது. ஸ்பூப் பாணியிலான கொமடி சபாஷ் பெறுகிறது.
சந்தானம், நவீன உடையில் தோன்றினாலும்.. இளைஞர்களுக்கான மொழியில் உச்சரித்தாலும் அவருடைய திரை தோற்றம் ,' விமர்சகர்' என்ற கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை.
நாயகியாக நடித்திருக்கும் கீதிகா,திரையில் அழகாக இருந்தாலும் பேயாக தோன்றும் போது தான் ரசிக்க வைக்கிறார்.
முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் இன்ட்ரஸ்டிங்கான விடயங்கள் சற்று கூடுதலாக இடம் பிடித்திருக்கிறது. கலை இயக்குநர் வடிவமைத்திருக்கும் மாய உலகம், கவனத்தைக் கவர்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
டெவில் டபுள் நெக்ஸ்ட் லெவல் - லெவல் கிராசிங்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM