(எம்.மனோசித்ரா)
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் கொழும்பு மாநகரசபை உள்ளிட்டவற்றில் ஆட்சியமைப்பது குறித்து ஆளும், எதிர்க்கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக பல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன.
அந்த வகையில் சனிக்கிழமை (17) கொழும்பு - பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்திலும் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அதற்கமைய நாளை திங்கட்கிழமை முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையிலான குழுவொன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்திக்கவுள்ளது. உள்ளூராட்சிமன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பான தமது நிலைப்பாட்டை இக்குழு சஜித்திடம் தெரிவிக்கவுள்ளது.
இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ள உள்ளூராட்சிமன்றங்களிலும், அரசாங்கத்துக்கு சமமான ஆனவனங்களைப் பெற்றுக் கொண்டவற்றிலும் ஆட்சியமைப்பதற்கான ஜனநாயக ரீதியிலான அணுகல்கள் குறித்து கலந்தாலோசித்து வருகின்றோம்.
அதற்குரிய தலைமைத்துவத்தை வழங்குவதற்காக முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்று ஒன்றிணைந்த பொது எதிரணியொன்றை ஸ்தாபிப்பதற்கான கலந்தாலோசனைகளையும் முன்னெடுத்து வருகின்றன. பொது எதிரணி என்பதற்கு அப்பால் அரசாங்கத்துக்கு எதிரான சக்திகளின் ஒன்றிணைவே அனைவரது நோக்கமாகும்.
இதற்காக ஜனாதிபதி கோபமடையவோ விரோதம் கொள்ளவோ கூடாது. இது ஜனநாயக நாடாகும். அதற்கமையவே நாம் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எனவே ஜனாதிபதி நினைப்பதைப் போன்று சட்டத்தை மாற்ற முடியாது.
எதிர்க்கட்சிகளுக்கு இடமளிக்க முடியாது என்றால் எதற்காக தேர்தலை நடத்தினர்? பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் டில்வின் சில்வா பெயரிடுபவர்களை உள்ளுராட்சிமன்றங்களில் பதவிகளுக்கு நியமித்திருக்கலாமல்லவா? மக்கள் ஆணையை மீறுவதற்கு எந்த கட்சிக்கும் அதிகாரமோ உரிமையோ கிடையாது. எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ள தொகுதிகளில் நாம் ஆட்சியமைப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM