தம்பலகாமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கி வைப்பு

18 May, 2025 | 01:00 PM
image

திருகோணமலை தம்பலகாமம் கள்ளிமேட்டு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி ஞாயிற்றுக்கிழமை (18) காலை  வழங்கி வைக்கப்பட்டன. 

குறித்த கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வை அப்பகுதி இளைஞர்கள் பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். 

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும் நீதிக்கான மக்களின் போராட்டத்தையும் வெளிப்படுத்தும் முக்கியமான வலையொலியாக மாறியுள்ளன.

இதன்போது இறுதி யுத்தத்தில்  முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் இளைஞர்கள், காணாமற்போனோரின் உறவுகள், சமூகச் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்கள் துயர அனுபவங்களைப் பகிர்ந்ததோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாழ்வுகளைப் பற்றி பேசினர்.

நிகழ்வு, சமூக நினைவாற்றலை பாதுகாத்து, இனநீக்கம், உயிரிழப்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் எதிர்வினையாகவும் அமைந்தது.

மே மாதம் 12 தொடக்கம் 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் வடகிழக்கில் உள்ள தமிழர் தாயகங்களில் ஞாயிற்றுக்கிழமை (18) விசேடமாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெற்றன. 

இறுதி யுத்தத்தின் போது இனப்படுகொலைகளுக்கான நீதியை தற்போது நினைவேந்தலில் மக்கள் மனவேதனையுடன் வேண்டி நிற்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21
news-image

'டிட்வா' சூறாவளிக்கு பின் முதன்முறையாக பேராதனையிலிருந்து...

2026-07-11 18:21:58
news-image

ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

2026-07-11 17:55:03