நடப்பு சம்பியன் இஸிபத்தனவை முன்னாள் சம்பியன் திரித்துவம் எதிர்கொள்ளும் ஜனாதிபதி கிண்ண றக்பி இறுதிப் போட்டி இன்று

Published By: Digital Desk 3

18 May, 2025 | 12:03 PM
image

(நெவில் அன்தனி)

நடப்பு சம்பியன் இஸிபத்தன கல்லூரிக்கும் முன்னாள் சம்பியன் கண்டி திரித்துவ கல்லூரிக்கும் இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஜனாதிபதி கிண்ண பாடசாலைகள் றக்பி இறுதிப் போட்டி கொழும்பு றோயல் கல்லூரி விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டுவரும் ஜனாதிபதி கிண்ண இறுதிப் போட்டியில் அதிக தடவைகள் பங்குபற்றி அதிக தடவைகள் சம்பியனான கல்லூரி என்ற பெருமை இஸிபத்தன கல்லூரியை சாருகிறது.

இந்த வருடம் நடப்பு சம்பியனாக 26ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடும் இஸிபத்தன கல்லூரி இதுவரை 12 தடவைகள் ஜனாதிபதி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

'பாடசாலை றக்பி மன்னர்கள்' என வருணிக்கப்படும் இஸிபத்தன கல்லூரி அணிக்கு இந்த வருடம் தினேத்ர தொடங்கொட தலைவராக விளையாடுகிறார்.

மலேசியாவில் இந்த வருடம் நடைபெற்ற ஆசிய 18 வயதுக்குட்பட்ட றக்பி போட்டியில் இலங்கை பாடசாலைகள் அணியின் உதவித் தலைவராக விளையாடியிருந்தார்.

இஸிபத்தன அணியில் தினேத்ர தொடங்கொடவுடன் அபத்துல் அஹமத், அவிஷ்க ஹிரான், சித்துப்ப போமேத், ஷாக்கிப் ஸும்ரி ஆகியோர் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

இஸிபத்தன அணி ஜனாதிபதி கிண்ணத்தை 13ஆவது தடவையாக சுவீகரிக்கும் குறிக்கோளுடன் திரித்துவ அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த வருடம் முன்னோடி கால் இறுதிப் போட்டியில் கண்டி ஸ்ரீ சுமங்கல கல்லூரியை 61 - 0 எனவும் கால் இறுதிப் போட்யில் வெஸ்லி கல்லூரியை 37 - 23 எனவும் அரை இறுதிப் போட்டியில் றோயல் கல்லூரியை 24 - 17 எனவும் இஸிபத்தன கல்லூரி வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மறுபக்கத்தில் 12 வருட இடைவெளிக்குப் பின்னர் ஜனாதிபதி கிண்ண றக்பி இறுதிப் போட்டியில் பங்குபற்றவுள்ள திரித்துவ கல்லூரி கடைசியாக 2011இல் சம்பியன் பட்டத்தை சூடியிருந்தது.

ஐந்த தடவைகள் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்த திரித்துவ கல்லூரி 3 தடவைகள் சம்பியானதுடன இரண்டு தடவைகள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

பாடசாலைகளில் மிகச் சிறந்த றக்பி அணி என்ற பெருமையை மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கொண்டிருந்த திரித்துவ அணி இம்முறை திருப்பங்களை ஏற்படுத்தும் கங்கணத்துடன் பாடசாலைகள் றக்பி போட்டிகளில் பங்குபற்றி வருகிறது.

திரித்துவ றக்பி அணிக்கு உஸ்மான் சபராஸ் தலைவராக விளையாடுகிறார்.

கடந்த வருடம் ப்றட்பி கேடய றக்பி போட்டியில் 55 மீற்றர் தூர பெனல்டியை நேர்த்தியாக உதைத்தது திரித்துவ அணிக்கு மகத்தான வெற்றியை ஈட்டிக்கொடுத்த ஷான் அல்தாப் இணை உதவித் தலைவராக நியிமிக்கப்பட்டுள்ளார். அவருடன் நிசித் குமாரசிங்கவும் இணை உதவித் தலைவராக விளையாடுகிறார்.

இந்த வருடம் முன்னோடி கால் இறுதிப் போட்டியில் புனித அந்தோனியார் கல்லூரியை 62 - 5 எனவும் கால் இறுதிப் போட்டியில் சென். தோமஸ் கல்லூரியை 24 - 15 எனவும் அரை இறுதிப் போட்டியில் ஸாஹிரா கல்லூரியை 29 - 12 எனவும் திரித்துவ கல்லூரி வெற்றிகொண்டிருந்தது.

இந்த இரண்டு கல்லூரிகளும் ஜனாதிபதி கிண்ண றக்பி இறுதி ஆட்ட வரலாற்றில் 4 தடவைகள் ஒன்றை ஒன்று எதிர்த்தாடியுள்ளன. அவற்றில் திரித்துவ கல்லூரி 3 - 1 என முன்னிலை வகிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175...

2025-06-19 14:40:39
news-image

மூன்றாம் நாள் பகல் போசன இடைவேளையின்போது...

2025-06-19 12:25:11
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம்...

2025-06-19 05:57:18
news-image

மழையினால் இரண்டரை மணி  நேர தாமதத்தின்...

2025-06-19 05:54:08
news-image

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு லங்கா...

2025-06-18 14:14:33
news-image

பலம் வாய்ந்த நிலையில் பங்களாதேஷ்

2025-06-18 12:26:58
news-image

ஐ லீக் கால்பந்தாட்டத்தின் முதலாம் கட்ட...

2025-06-17 21:50:43
news-image

அணித் தலைவர் ஷன்டோ, முன்னாள் தலைவர்...

2025-06-17 19:32:38
news-image

அணித் தலைவர் சன்டோ, ரஹிம் ஆகியோர்...

2025-06-17 14:57:43
news-image

டெஸ்ட் அறிமுகம் பெற்றனர் லஹிரு உதார,...

2025-06-17 12:22:55
news-image

மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு SLC...

2025-06-17 12:13:14
news-image

அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றைப் போன்று...

2025-06-17 01:25:54