(லியோ நிரோஷ தர்ஷன்)
சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளது. சர்ச்சைக்குரிய புதிய அமெரிக்க வரி கட்டணக் கொள்கையால் ஏற்பட்ட தொடர்ச்சியான கொந்தளிப்புக்கு மத்தியில் இந்தக் குழு இலங்கை வருகிறது.
இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவம், புதிய பொருளாதார முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையிலேயே உயர்மட்ட பிரதிநிதிகள் குழு கொழும்புக்கு விஜயம் செய்வதாக தெரிவித்தள்ள சீன தரப்பு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் பொருளாதார வர்த்தக துறைசார்ந்த பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இலங்கை - சீன வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்தின் மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்ப விருந்தினராக பங்கேற்கும் சீன வர்த்தக அமைச்சருடன், 77 சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 115 வர்த்தக பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின் ஊடாக இருதரப்பு வணிக உறவுகளை வலுப்படுத்தவும், வணிகப் தொடர்புகளை எளிதாக்கவும், மேலும் பல்வேறு துறைகளில் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வழிகளை அடையாளம் காணவும் முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.
இயந்திரங்கள் மற்றும் மின்னணு பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான சீன வர்த்தக சபை, உணவுப் பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான சீன வர்த்தக சபை, பூர்வீக உற்பத்தி மற்றும் விலங்கு துணை தயாரிப்புகள், தனியார் துறைக்கான சீன சர்வதேச வர்த்தக சபை மற்றும் ஆடை இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான சீன வர்த்தக சபை ஆகிய துறைகளை சார்ந்த சீன நிறுவனங்களின் பிரநிதிகள் இலங்கை விஜயத்தில் பங்கேற்கின்றனர்.
எவ்வாறாயினும் கருப்பு தேயிலை, சாதிக்காய் மற்றும் கிராம்பு போன்ற மசாலாப் பொருட்கள், நண்டு உள்ளிட்ட கடல் உணவுகள், பப்பாளி, அன்னாசி, கொய்யா மற்றும் மாம்பழம் போன்ற பழங்கள், அத்துடன் பிற உணவு மற்றும் விவசாய பொருட்கள் ஆகியவையை இலங்கையிலிருந்து இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து சீன பிரதிநிதிகள் குழு கொழும்பு விஜயத்தின் போது ஆர்வம் செலுத்த உள்ளது.
இலங்கைக்கான ஏற்றுமதியைப் பொறுத்தவரை சீன வணிகங்கள், பூண்டு, சீரகம், பெருஞ்சீரகம் விதைகள், பல்வேறு விவசாய பொருட்கள், உருளைக்கிழங்கு, காய்கறி பொருட்கள், ஆடை மற்றும் வீட்டு பொருட்களை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்த பிரதிநிதிகள் குழு எதிர்பார்க்கின்றது.
மறுபுறம் நீர் சுத்திகரிப்பு, சுத்தமான எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், பொறியியல் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் சாத்தியமான ஒத்துழைப்புகள் குறித்து ஆராயப்பட உள்ளது. வாகன உற்பத்தி இணைப்புகள், தேயிலைத் தோட்டம் மற்றும் தேயிலை நிறுவன மேம்பாடு ஆகியவற்றிலும் சீன குழு அவதானம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM