ஆர்.ராம்
2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இம்முறையும் 16ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதான நிகழ்வு அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலில் முன்னெடுக்கப்படவுள்ளது.
காலை 10.15இற்கு கொள்கைப்பிரகடனம் வாசிக்கப்பட்டுரூபவ் 10.29இற்கு நினைவொலி எழுப்பப்படும். 10.30இற்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்படும்.
பொதுச்சுடர் ஏற்றப்படும் சமநேரத்தில் ஒற்றைச்சுடர் ஏற்றப்படவுள்ளதோடு, அதனையடுத்து மலர் அஞ்சலி செலுத்துவதுடன் நினைவேந்தல் நிகழ்வு முடிவுக்கு வரவுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர் அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவிக்கையில்,
எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும்ரூபவ் அநீதிக்கு நீதி வேண்டியும் மே 18ஆம் நாளில் அணி திரளுமாறு அழைத்து நிற்கின்றோம்.
தமிழின படுகொலையின் நாளாகிய மே 18 தினத்தில் நாம் அனைவரும் திரளாக ஒன்றுகூடி எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும் ரூபவ் அந்த அநீதிக்கு நீதி வேண்டியும் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரவும் ஒன்றுகூட அழைத்து நிற்கின்றோம்.
அனைவரும் வருகை தந்து எமது இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாம் குரல் கொடுப்போம் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவோம். நாம் அழிக்கப்பட்டோம் என்கின்ற அந்த விடயத்தை சர்வதேசம் வரை உரத்து சொல்வதற்காக இணைந்து கொள்வோம் என்றார்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதோடு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலும் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் தமிழினப் படுகொலைநினைவேந்தலும் சர்வமதப்பிரார்த்தனையும் இன்று மாலை 5மணிக்கு நடைபெறவுள்ளது.
மன்னார்
மன்னார் நகரில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. காலை 6.30இற்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு 8.30இற்கு சுடர் ஏற்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பு
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறையில் காலை 9.30இற்கு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதோடு சித்தாண்டியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான உறவுகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பங்கேற்பில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு
கொழுப்பு வெள்ளவத்தை அலக்ஸ்ஷாண்டா வீதிக்கு எதிராக கடற்கரைப்பகுதியில் காலை 10.30இற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பவர்கள் வெள்ளைப்பூக்களுடன் வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
இதனைவிடவும்ரூபவ் வட, கிழக்கில் உள்ள அரசியல்கட்சிகளின் அலுவலகங்கள், சமயத்தலங்கள், மற்றும் சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் பொது இடங்களிலும்ரூபவ் தனிப்பட்ட முறையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM