(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் ஆறாம் நாளான இன்று சனிக்கிழமை (17) இலங்கைக்கு நான்கு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
வவுனியாவைச் சேர்ந்த லோகநாதன் கஜிந்தினி இலங்கைக்கான முதலாவது வெண்கலப் பதக்கத்தை கடந்த புதன்கிழமை வென்ற பின்னர் இன்றைய தினம் மேலும் நான்கு வெண்கலப் பதக்கங்கள் இலங்கைக்கு கிடைத்தன. இதற்கு அமைய இதுவரை 5 வெண்கலப் பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது.
சத்சர சத்துமின வர்ணகுலசூரிய, அரவிந்த வித்தான ஆராச்சிலாகே ஜயதிஸ்ஸ ஆகிய வீரர்களும் பவனி கவிஷா முத்துகல, சப்ரினா ரஹீம் ஆகிய வீராங்கனைகளும் தத்தமது அரை இறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கங்களை வெல்ல நேரிட்டது.
இளையோர் ஆண்களுக்கான 48 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீரர் நூர்கான் குமர்பெக்கோவுக்கு பலத்த சவாலாக போட்டியிட்ட இலங்கை வீரர் சத்சர சத்துமின வர்ணகுலசூரிய ஐந்து மத்தியஸ்தர்கள் வழங்கிய 27 - 29, 26 - 29, 28 - 29, 27 - 29, 28 - 29 என்ற புள்ளிகளின் அடிப்படையில் 0 - 5 என தோல்வி அடைந்தார்.
இளையோர் ஆண்களுக்கான 57 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீரர் நிக்மன் நிக்மெட் என்பவரின் தாக்குதல்களுக்கு இலங்கை வீரர் அரவிந்த வித்தான ஆராச்சிலாகே ஜயதிஸ்ஸவினால் ஈடுகொடுக்க முடியவில்லை.
ஐந்து மத்தியஸ்தர்கள் வழங்கிய 24 - 30, 23 - 30, 24 - 30, 26 - 30, 25 - 30 என்ற புள்ளிகளின் அடிப்படையில் 0 - 5 என ஜயதிஸ்ஸ தோல்வி அடைந்தார்.
இளையோர் பெண்களுக்கான 48 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் நடுநிலையாளராக போட்டியிட்ட இந்தியாவின் குமாரி சன்ச்சலிடம் இலங்கையின் பவனி கவிஷா முத்துகல தோல்வி அடைந்தார்.
பவனி கவிஷா பல சந்தர்ப்பங்களில் எதிராளியான குமாரி சன்சலியை தாக்கியவாறு மத்தியஸ்தர்களின் புள்ளிகளைப் பெற்றவண்ணம் இருந்தார். ஆனால், இறுதியில் 28 - 29, 29 - 28, 28 - 29, 28 - 29, 27 - 30 என்ற புள்ளிகள் அடிப்படையில் 1 - 4 என பவனி கவிஷா தோல்வி அடைந்தார்.
இளையோர் பெண்களுக்கான 52 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீராங்கனை ஆப்துமெசிட்டோவா ரக்மினாவின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை வீராங்கனை சப்ரினா ரஹீம் 2ஆம் சுற்றில் போட்டியை நிறுவதற்கு ஒப்புக்கொண்டு தோல்வி அடைந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM