ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாகிய நாம் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றை சந்தித்து பேசியிருக்கின்றோம். அவர்கள் முன்னிலை வகிக்கும் இடங்களில் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்க தயாராக இருக்கிறோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அவரது இல்லத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அகில இலங்கை தமிழ் காங்கிரஸை பொறுத்தவரையில் கொள்கை ரீதியான சில முடிவுகளை எட்ட வேண்டும் என கூறியிருந்தார்கள். அதாவது, மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் சாசனத்துக்கான முயற்சியான ஏக்கே ராச்சிய என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
நாங்கள் இணைந்து தமிழரசுக் கட்சியிடம் இது குறித்து வலியுறுத்தும்போது அந்த விடயத்தை அவர்கள் கைவிட முடியும்படி செய்ய முடியும் என கூறியிருந்தார்கள்.
எங்களுக்கு அதில் மாறுபட்ட கருத்து இல்லாவிட்டாலும் இந்த புதிய அரசாங்கமானது புதிய ஒரு அரசியல் சாசனத்தை கொண்டுவருமா என்பதே ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
அப்படி வருமாக இருந்தால் அது புதிய அரசியல் சாசனமாக இருக்குமா? அல்லது பழைய அரசியல் சாசனத்தினுடைய தொடர்ச்சியாக இருக்குமா என்பது கேள்வியாக உள்ளது.
ஆகவே இல்லாத ஒரு விடயத்தை பற்றி பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்பதுதான் எமது கேள்வியாக உள்ளது. அதனை நாங்கள் அவர்களுக்கு தெளிவாக சொல்லியிருந்தோம்.
எம்மை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இப்போது இருக்கக்கூடிய ஆளும் தரப்பு உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதை தவிர்த்து, தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக் கூடியவர்கள் இந்த மாகாண ஆட்சி அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் தான் நாங்கள் ஈடுபடுகின்றோம்.
அந்தவகையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ஆசனங்களை வைத்திருக்கும் இடங்களில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் நாங்கள் தெரிவித்திருக்கின்றோம்.
பல இடங்களில் தமிழரசு கட்சி முன்னிலை வகித்தாலும் அறுதிப் பெரும்பான்மை என்ற விடயங்கள் பெரும்பாலான இடங்களில் இல்லை. ஆகவே ஆட்சி அமைப்பதற்கு அவர்களுக்கு ஏனைய கட்சிகளின் ஆதரவுகள் தேவை.
எங்களிடமும் அந்த ஆதரவை கோரியிருந்தார்கள். ஆகையால் அவர்களுக்கான ஆதரவுகளையும் நாங்கள் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.
அதேசமயம் இந்த கூட்டு என்பது வெறுமனே ஆட்சி அதிகாரங்களுடன் போய்விட கூடாது. தமிழ் மக்களுடைய அதிகாரங்களை அல்லதை உரிமைகளை பெற்றுக் கொள்வதை நோக்கி இது நகர வேண்டும்.
நான்கு சபைகளில் தவிசாளர் அதிகாரங்களை எமக்கு தருமாறு நாங்கள் கோரியிருக்கின்றோம். அந்தவகையில் மன்னார் - மாந்தை, சாவகச்சேரி, கோப்பாய், மானிப்பாய் ஆகிய பிரதேச சபைகளில் இவ்வாறு தவிசாளர் அதிகாரங்களை வழங்குமாறு கோரியிருந்தோம்.
அதுபற்றி அவர்கள் ஆராய்ந்து கூறுவதாக கூறியிருக்கின்றார்கள். ஆகவே அவர்கள் ஆராய்ந்து பதில் கூறிய பின்னர் நாங்கள், அவர்கள் கூறும் பதில் எவ்வாறு இருக்கப்போகிறது என்று பார்த்து ஏனைய முடிவுகளை எடுக்கக் கூடியதாக இருக்கும் என நினைக்கிறோம்.
எம்மை பொறுத்தவரை நாங்கள் ஒரு தெளிவான விடயத்தில் இருக்கின்றோம், வடக்கு - கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் ஆட்சி அதிகாரங்கள் என்பது தமிழ் மக்களின் கைகளில் இருக்க வேண்டும், தமிழ் தேசியத்தை அங்கீகரிப்பவர்களது கைகளில் இருக்க வேண்டும்.
ஆகவே அந்தவகையில் அந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மாத்திரமல்லாமல், எதிர்காலத்தில் தமிழ் மக்களினுடைய சிறப்பான உரிமைகளை பெற்றுக் கொள்ள கூடிய ஒரு கூட்டை நிறுவுவதற்கான ஒரு அடித்தளமாக இது இருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் விரும்புகின்றோம்.
அதேபோல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற கருத்தும் ஏற்படுகின்றது. அந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது முன்னர் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மாதிரி இல்லாமல், மாறாக அது ஒரு பதிவு செய்யப்பட்ட, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரியான புரிந்துணர்வு உடன்படிக்கையாக அது இருக்க வேண்டும் வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. ஆகவே அவ்வாறான சில விடயங்கள் தொடர்பாக நாங்கள் அவர்களோடு பேசியிருக்கின்றோம். அவர்கள் அதற்கு பதில் வழங்கிய பின்னர் நாங்கள் அடுத்தகட்ட விடயங்கள் பற்றி ஆலோசிக்கலாம் - என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM