மன்னாரில் பலத்த காற்றுடன் கடும் மழை ; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

17 May, 2025 | 05:30 PM
image

மன்னாரில் சனிக்கிழமை (17) காலை வீசிய பலத்த காற்று மற்றும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இன்று காலை 06.00  மணி அளவில் பலத்த காற்று வீசியதுடன் கடும்மழையும்  பெய்தது.

இதனால் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சில மணி நேரம் மின்தடை ஏற்பட்டதுடன் பின்னர் மின்சாரம் வழமைக்கு திரும்பியது.

பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மன்னார் பேசாலை கிராம மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் காலை கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.

மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட டோலர் படகுகள் மற்றும் கண்ணாடி இழை படகுகள் காற்றில் சிக்கிய நிலையில் கரையில் ஒதுக்கப்பட்டது.

இதனால் படகுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை பலத்த காற்று காரணமாக பேசாலை கடற்கரையில் காணப்பட்ட மீனவர்களின் மீன் வாடிகள் சேதமடைந்துள்ளன.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஏனைய மீனவ கிராமங்களிலும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் சிறிது பாதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முத்திரை வரியை அதிகரிப்பதற்கான தீர்வை (விசேட...

2025-06-19 18:46:37
news-image

கொழும்பில் நடைபெற்ற ADB இன் ‘பொருளாதார...

2025-06-19 18:45:09
news-image

தோல்விகளின் மும்மூர்த்தியாகியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித்...

2025-06-19 15:31:59
news-image

கொழும்பு பங்குச் சந்தை ஐந்தாவது நாளாக...

2025-06-19 18:25:17
news-image

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தைச்...

2025-06-19 18:36:39
news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-06-19 16:42:26
news-image

கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும்...

2025-06-19 17:13:05
news-image

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின்...

2025-06-19 17:10:25
news-image

தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர்...

2025-06-19 17:03:13
news-image

புத்தளம் - குருணாகல் வீதியில் விபத்து...

2025-06-19 16:22:11
news-image

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்...

2025-06-19 16:54:44
news-image

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ;...

2025-06-19 16:45:56