நாட்டு மக்கள் தற்போது பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வருமான மூலங்கள் மூடு கண்டு, சரியான வாழ்வாதாரம் கிடைக்காமையால், மக்களுக்கு கிடைக்கும் வருமானம் குறைந்து, பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. அரிசி, பால் மா, தேங்காய் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்குத் தேவையான உப்பைக் கூட இந்த அரசாங்கத்தால் வழங்க முடியாதுபோயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மக்கள் பிரச்சினைகளை கேட்டறியும் “கிராமத்துக்கு கிராமம் நகரத்துக்கு நகரம்” வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு ‘மல்லிகாராம வீடமைப்புத் தொகுதி’ மக்களுடன் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது வினைதிறன் அற்ற அரச நிர்வாகமே காணப்படுகின்றது.
தற்போதைய ஆட்சியாளர்கள் பேசுவதில் மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும், மக்களின் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் பதில்களோ தீர்வுகளோ இல்லை. ஆளும் தரப்பினர் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிக்கு உரிமை இல்லை என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
தற்போதுள்ள தேர்தல் முறையின் கீழ் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் அதிகாரத்தை அமைக்கும் உரிமை எதிர்க்கட்சிக்கும் காணப்படுகின்றன. எனவே உப்பைக் கூட சரியாக வழங்க முடியாத அரசாங்கத்தின் இந்த அச்சுறுத்தல்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அஞ்சாது.
எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்டவும், ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தவும் ஜனநாயக கட்டமைப்பிற்குள் எடுக்க முடியுமான அதிகபட்ச நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும்.
எதிர்க்கட்சி அதிகாரத்தைப் பெற்றால் அதிகபட்சமாக 3-4 மாதங்களே தக்க வைக்கும் என்று வதந்திகளைப் பரப்புவதன் மூலமும், போலிப் பிரச்சாரம் செய்வதன் மூலமும் எதிர்க்கட்சியை பலவீனப்படுத்த முடியாது.
எதிர்க்கட்சியை இல்லாதொழிக்க இந்த அரசாங்கம் தற்போது பல்வேறு தந்திரோபாயங்களைக் கையாண்டு வருகிறது. இவற்றுக்கு ஐக்கிய மக்கள் சக்தி சிக்கிக் கொள்ளாது.
அரசாங்கத்தால் செய்ய முடியாததை, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் செய்து காட்டும். மக்களின் துன்பங்களைப் போக்கச் செய்வோம்.
தற்போதைய அரசாங்கம் வாய்போச்சு மூலம் மட்டுமல்லாது பொய்கள் மூலமும் மக்களை ஏமாற்றி வருகிறது. உண்மை, நடைமுறை யதார்த்தம் மற்றும் அபிவிருத்தி மூலம் மக்களை அதிகாரப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்.
முக்கிய அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் தேர்தல் மேடைகளில் கலந்து கொள்வதைப் பாரக்கிறோம். இன்று அவர்கள் மக்கள் மத்தியில் செல்கிறார்கள் இல்லை. தேர்தல் முடிந்த பிற்பாடும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அரசியல்வாதிகள் மக்களுக்கான தமது உண்மையான கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றி வருகின்றனர்.
தேர்தலுக்குப் பிறகும் மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்து ஆராய்ந்து, குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM