“வரையறைகளுக்கு அப்பால் வளர்ச்சியடைதல்” – யூனியன் அஷ்யூரன்ஸ் புதிய ஊழியர் பெறுமதி அறுதியுரை அறிமுகம்

Published By: Digital Desk 2

17 May, 2025 | 01:28 PM
image

“வரையறைகளுக்கு அப்பால் வளர்ச்சியடைதல்” என்பது நீண்ட கால அடிப்படையில் மூலோபாய ரீதியில் பங்களிப்பு வழங்கும். நிபுணத்துவ வளர்ச்சியை ஊக்குவிப்பது என்பதில் மாத்திரம் நாம் கவனம் செலுத்தாமல், எமது ஊழியர்களின் பரந்த நலனிலும் கவனம் செலுத்தி, தனிப்பட்ட ரீதியிலும், நிபுணத்துவ ரீதியிலும் முன்னேற்றமடைவதை உறுதி செய்கிறது என யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம மக்கள் அதிகாரி நிசன்சலா பரனயாபா தெரிவித்தார்.

இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் முன்னணி தனியார் ஆயுள் காப்புறுதி நிறுவனமான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது புதிய ஊழியர் பெறுமதி அறுதியுரையை (EVP) “வரையறைகளுக்கு அப்பால் வளர்ச்சியடைதல்” எனும் தொனிப்பொருளில் அறிமுகம் செய்யும் நிகழ்வு கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது ஊழியர்களின் ஆற்றல் மற்றும் திறமைகளில் எமது சிறந்த வலிமை தங்கியுள்ளது என்பதில் நாம் உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளோம்.

ஊழியர்களுக்கு தமக்கு சவாலாக அமைவது, தமது ஆற்றல்களை மேம்படுத்துவது மற்றும் அர்த்தமுள்ள மாற்றத்தை முன்னெடுக்கச் செய்வது போன்றவற்றில் “வரையறைகளுக்கு அப்பால் வளர்ச்சியடைதல்” என்பது நீண்ட கால அடிப்படையில் மூலோபாய ரீதியில் பங்களிப்பு வழங்கும்.

நிபுணத்துவ வளர்ச்சியை ஊக்குவிப்பது என்பதில் மாத்திரம் நாம் கவனம் செலுத்தாமல், எமது ஊழியர்களின் பரந்த நலனிலும் கவனம் செலுத்தி, தனிப்பட்ட ரீதியிலும், நிபுணத்துவ ரீதியிலும் முன்னேற்றமடைவதை உறுதி செய்கிறது என்றார்.

தமது ஊழியர் படையணியை தொடர்ச்சியாக மேம்படுத்தல் மற்றும் நிறுவனத்தினுள் முன்னோக்கி சிந்திக்கும் கலாசாரத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இலங்கையின் போட்டிகரமான தொழில் சந்தையில் தெரிவுக்குரிய தொழில் வழங்குநராக நிறுவனத்தை நிலைநிறுத்தி, சிறந்த திறமையாளர்களை தக்க வைத்துக் கொள்வது, கவர்ந்திழுப்பது, கட்டியெழுப்புவது போன்ற யூனியன் அஷ்யூரன்ஸின் பரந்த வியாபார மூலோபாயத்துக்கமைய இந்த EVP அறிமுகம் அமைந்துள்ளது. 

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தினூடாக, வினைத்திறனான மற்றும் கைகோர்த்து இயங்கும் பணியிடச் சூழல் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அதனூடாக ஊழியர்களுக்கு தமது முழு ஆற்றலையும் எய்தக்கூடியதாக இருக்கும்.

திறமைகளுக்கு முன்னுரிமை, திறன் விருத்தி, தொழில்நிலை முன்னேற்றம் மற்றும் பணி-வாழ்க்கை சமநிலை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கி, மீட்சியுடனான, எதிர்காலத்துக்கு தயாரான பணியாளர் குழாம், மாற்றமடைந்து வரும் வியாபார சூழலில் இயங்கக்கூடிய ஊழியர்களை கொண்டிருப்பதற்கு ஏதுவாக அமையும்.

இந் நிகழ்வில், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பிரதம மக்கள் அதிகாரி இசுரு குணசேகர, யூனியன் அஷ்யூரன்ஸ் சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் அணி அங்கத்தவர்கள் அடங்கலாக, பிரதான நபர்கள் பலர் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முகமாக விளங்கும் Zesta-வின் விளம்பர...

2025-06-19 15:41:05
news-image

இலங்கை முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில்...

2025-06-18 17:29:14
news-image

உலகளாவிய நிலைத்தன்மை அங்கீகாரத்தின் இரண்டாவது ஆண்டை...

2025-06-18 13:28:22
news-image

செலான் ஹரசர, பிரத்தியேக சலுகைகள் ,...

2025-06-18 13:21:37
news-image

John Keells Properties-TRI-ZEN நிர்மாணச் செயற்திட்டத்தின்...

2025-06-18 12:42:10
news-image

ஒரியன்ட் பைனான்ஸ் இப்போது ஜனசக்தி பைனான்ஸ்...

2025-06-17 11:25:11
news-image

இலங்கை புகையிரத திணைக்களத்துடன் இணைந்து கொழும்பு...

2025-06-16 15:06:21
news-image

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை,...

2025-06-12 16:30:51
news-image

LOLC குழுமத்தில் ரூபா. 41 பில்லியன்...

2025-06-12 12:29:00
news-image

AIA பொசன் வந்தனா - யாத்ரீகர்களுக்கான...

2025-06-12 12:14:32
news-image

மலைநாட்டு தலைநகரில் உயர் கல்வி மாற்றத்திற்கு...

2025-06-12 12:34:32
news-image

Kedella Construction Expo 2025 உடனான...

2025-06-11 12:09:07