தரநிலைக்கும் உற்பத்தித் திறனுக்குமான இலங்கையின் முதன்மை மேடை : தேசிய தரம் மற்றும் உற்பத்தித் திறன் மாநாடு -2025 ஐ அறிவித்துள்ள SLAAQP

17 May, 2025 | 02:21 PM
image

இலங்கையின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை முன்னேற்றும் சங்கமான Sri Lanka Association for the Advancement of Quality and Productivity (SLAAQP), 2025 தேசிய தரம் மற்றும் உற்பத்தித் திறன் மாநாடு (NCQP 2025) இனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் 2025 தேசிய தரம் மற்றும் உற்பத்தித் திறன் மாநாடு தொடர்பான அறிவிப்பு  வெளியிடப்பட்டது .

இந்த மாநாடானது கல்கிஸ்ஸை மவுண்ட்லவேனியா ஹோட்டலில் இம்மாதம் 21 ஆம்திகதியும் 22 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. இந்த மாநாட்டில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 440 இற்கும் அதிகமான குழுக்கள் ஒன்றிணையவுள்ளன.

தரநிலையும் உற்பத்தித் திறனும் பற்றிய புத்தாக்க கண்டுபிடிப்புகளும் சாதனைகளையும் மாநாட்டில் ஒன்றிணையவுள்ள நிறுவனங்கள் காட்சிப்படுத்தவுள்ளன. இது நாட்டிலேயே மிகப்பெரிய தரநிலை நிபுணர்களின் சந்திப்பாக அமையவுள்ளது.

1996 ஆம் ஆண்டு Quality Circle Association of Sri Lanka இலிருந்து நிறுவப்பட்ட இலங்கையின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை முன்னேற்றும் சங்கமானது ( SLAAQP ), தரத்தையும் உற்பத்தித்திறனையும் முன்னேற்றும் உந்துசக்தியாக செயற்பட்டு வருகிறது. 

இதுகுறித்து இலங்கையின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை முன்னேற்றும் சங்கத்தின் (SLAAQP ) தலைவர் டாக்டர் சுரானி டயஸ் தெரிவிக்கையில்,

“ தேசிய தரம் மற்றும் உற்பத்தித் திறன் மாநாடு (NCQP ) என்பது வெறுமனே ஒரு மாநாடல்ல, இது ஒன்று சேர்ந்து சாதனை புரிந்த எமது முயற்சிகளையும் புத்தாக்கங்களையும் கொண்டாடும் ஒரு விழாவாகும். இது தேசிய மட்டத்தில், குறிப்பாக தொழிற்சாலைகளில் செயற்படும் குழுக்களுக்கு தங்களின் வெற்றிக் கதைகளை பகிர அனுமதிக்கும் ஒரே மேடையாகும்” 

“SLAAQP எனும் வகையில் எமது நோக்கமானது, தொடர்ச்சியான முன்னேற்றம் என்பது விருப்பத்திற்குரிய ஒரு தெரிவல்ல; அது அவசியமான ஒன்று என்பதாகும். புத்தாக்கம், புதிய யோசனைகள் மற்றும் சிறந்து விளங்கும் கலாசாரத்தை வளர்ப்பதன் மூலம், சீரான தரநிலைகள் மற்றும் திறன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பணி மூலம், இலங்கை நிறுவனங்களை உலக சந்தை போட்டியில் நிலைத்து நிற்க செய்யும் உத்திகளை SLAAQP வழங்குகிறது.” என்றார்.

இந்த ஆண்டின் மாநாடு “எல்லைகளைக் கடந்து: தரம், உற்பத்தித் திறன் மற்றும் புத்தாக்கம் ஊடாக சந்தை போட்டியில் வெற்றி பெறுதல்” எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ளது. இதில் Quality Control Circles (QCCs), Quality Improvement Projects (QIPs), Lean Six Sigma (LSS), Cross-Functional Teams (CFTs), Kaizen நடைமுறைகள் போன்ற பல்வேறு தொழில்நுட்ப செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

NCQP 2025 இன் முக்கிய அம்சங்களில் ஒன்று, SLAAQP நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் இலங்கையில் உற்பத்தித்திறன் இயக்கத்தின் முன்னோடியான சுனில் ஜி. விஜேசிங்க அவர்களின் பெயரால் முதன் முறையாக வழங்கப்படும் Sunil G. Wijesinha Quality Control Circle Excellence Award 2025 ஆகும். இந்த விருது, தொழில்நுட்ப விசேடத்துவம், புத்தாக்கம், நிலைபேறான தன்மை மற்றும் உற்பத்தித்திறன் முயற்சிகளில் அளவிடக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. ஊடக சந்திப்பில் குறித்த விருதும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

தேசிய தரம் மற்றும் உற்பத்தித் திறன் மாநாட்டின் (NCQP 2025 ) தலைவி பியூமி பெரேரா இது பற்றித் தெரிவிக்கையில், 

“இந்த விருதானது தரம் மற்றும் உற்பத்தித் திறனின் மாற்றத்தக்க சக்தியை எடுத்துக்காட்டும் குழுக்களுக்கான ஒரு அங்கீகாரமாகும். இது இலங்கை நிறுவனங்கள் தேசிய அளவில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியிலும் சாதிக்கக்கூடிய திறனை எமக்கு நினைவூட்டுகிறது” என்றார்.

NCQP 2025 இல் வெற்றி பெறும் குழுக்கள், தாய்வானின் தலைநகர் தாய்பேயில் நடைபெறும் International Convention on Quality Control Circles 2025 இல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் பெறுவார்கள். இது ஆசியாவின் 14 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணையும் பெருமைக்குரிய பிராந்திய மேடையாகும்.

NCQP மாநாட்டிற்கு மேலதிகமாக, SLAAQP தன்னுடைய தாக்கத்தை மேலும் வலுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவை Total Quality Management (TQM) Excellence Award, Green Productivity Awards, மற்றும் 2025 ஜூலை 30ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது ஆண்டு ஆய்வுக் கருத்தரங்கம் ஆகியவையாகும். இந்த கருத்தரங்கம் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க நடைமுறைகளை பகிரும் மேடையாக அமையும். இது பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களுக்கு ஒரு கூட்டான சூழலை வழங்கும்.

மேலும், வணிகத்துறையுடன் இணைப்பை வலுப்படுத்தும் வகையில், SLAAQP இந்த ஆராய்ச்சி மாநாட்டுடன் இணைந்து ஒரு வணிக மன்றத்தையும் நடத்தவுள்ளது. இதில் தொழில்துறையின்

முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் விவாதிக்கப்படும் என்பதோடு, பங்கேற்பாளர்களுக்கு நடைமுறை ரீதியான நுண்ணறிவுகள் மற்றும் தீர்வுகளை இது உறுதி செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முகமாக விளங்கும் Zesta-வின் விளம்பர...

2025-06-19 15:41:05
news-image

இலங்கை முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில்...

2025-06-18 17:29:14
news-image

உலகளாவிய நிலைத்தன்மை அங்கீகாரத்தின் இரண்டாவது ஆண்டை...

2025-06-18 13:28:22
news-image

செலான் ஹரசர, பிரத்தியேக சலுகைகள் ,...

2025-06-18 13:21:37
news-image

John Keells Properties-TRI-ZEN நிர்மாணச் செயற்திட்டத்தின்...

2025-06-18 12:42:10
news-image

ஒரியன்ட் பைனான்ஸ் இப்போது ஜனசக்தி பைனான்ஸ்...

2025-06-17 11:25:11
news-image

இலங்கை புகையிரத திணைக்களத்துடன் இணைந்து கொழும்பு...

2025-06-16 15:06:21
news-image

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை,...

2025-06-12 16:30:51
news-image

LOLC குழுமத்தில் ரூபா. 41 பில்லியன்...

2025-06-12 12:29:00
news-image

AIA பொசன் வந்தனா - யாத்ரீகர்களுக்கான...

2025-06-12 12:14:32
news-image

மலைநாட்டு தலைநகரில் உயர் கல்வி மாற்றத்திற்கு...

2025-06-12 12:34:32
news-image

Kedella Construction Expo 2025 உடனான...

2025-06-11 12:09:07