வீதி விபத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் நான்கு நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, உறவினர் ஒருவருடன் கடந்த புதன்கிழமை (14) மோட்டார் சைக்கிளில் சென்றபோது, தனியார் பஸ் ஒன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
அருப்புக்கோட்டை அரசு வைத்தியசாலையிலும், பின்னர் வேலம்மாள் மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்,வெள்ளிக்கிழமை (16) மூளைச்சாவு அடைந்ததாக வைத்தியர்கள் உறுதி செய்தனர்.
இந்நிலையில், சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்தனர். அதற்காக, சிறுவனின் தந்தையிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
இதையடுத்து, கல்லீரல் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரிக்கும், சிறுநீரகங்கள், கருவிழிகள் மதுரை அரசு ராஜாஜி வைத்தியசாலை மற்றும் அப்பல்லோ வைத்தியசாலைக்கும் தானமாக வழங்கப்பட்டது.
இச் சிறுவனின் உடல், உறுப்பு தானத்தால் நான்கு நபர்கள் பயன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM