(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பின் 5ஆம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற கால் இறுதிப் போட்டிகளில் பங்குபற்றிய இலங்கையர்கள் ஐவரில் மூவர் வெற்றிபெற்று அரை இறுதிகளில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.
தேசிய சம்பியன் பசிந்து உமயங்க மிஹிரான், அஷேன் கருணாநாயக்க, தேஷான் ஜயசுந்தர ஆகிய மூவரும் தத்தமது கால் இறுதி குத்துச் சண்டைப் போட்டிகளில் வெற்றியீட்டினர்.
இதற்கு அமைய இலங்கைக்கு கிடைக்கவுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
இன்று பங்குபற்றிய இலங்கை வீரர்கள் ஐவரில் பசிந்து உதயங்க மிஹிரான் வெற்றிபெறுவது உறுதி என ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டிருந்தது.
ஆனால், குத்துச்சண்டைக்கு பெயர்பெற்ற நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தான் வீரரிடம் அவர் பலத்த சவாலை எதிர்கொள்ள நேரிடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவவே செய்தது.
ஆனால், 22 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 51 கிலோ கிராம் எடைப் பிரிவு கால் இறுதிப் போட்டியில் கிர்கிஸ்தான் வீரர் பெக்ஸாத் ஏர்கஷோவை இலகுவாக வீழ்த்தியதன் மூலம் அரை இறுதிக்கு முன்னேறிய பசிந்து உதயங்க மிஹிரானுக்கு பதக்கம் கிடைப்பது உறுதியானது.
மூன்று சுற்றுகளிலும் சிறந்த நுட்பத்திறனுடன் கடூரமான தாக்குதல்களைத் தொடுத்த மிஹிரான் 5 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் எதிராளியை திக்குமுக்காட வைத்து வெற்றிபெற்றார்.
22 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 54 கிலோ கிராம் எடைப் பிரிவு கால் இறுதிப் போட்டியில் மலேசியாவின் மொஹமத் ரிஸால் பின் வஹிதியிடம் ஓரளவு சவாலை எதிர்கொண்ட இலங்கை வீரர் அஷேன் ஷெஹார கருணாநாயக்க இறுதியில் 3 - 1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி அரை இறுதியில் போட்டியிட தகுதிபெற்றார்.
22 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவு கால் இறுதிப் போட்டியில் ஃப்ரெஞ்ச் பொலினேசியா வீரர் மெட்டெய் பௌலட் ஓசியரை எதிர்த்தாடிய மற்றொரு இலங்கை வீரர் தேஷான் ஜயசுந்தர மிக இலகவாக வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
அப் போட்டியில் ஆரம்பம் முதல் கடைசி வரை 3 சுற்றுகளில் அதீத திறமையை வெளிப்படுத்தி தாக்குதல்களைத் தொடுத்த தேஷான் ஜயசுந்தர 5 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மிக இலகுவாக வெற்றிபெற்றார்.
இலங்கை வீரர்கள் இருவருக்கு தோல்வி
22 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 57 கிலோ கிராம் எடைப் பிரிவுக்கான கால் இறுதியில் கஸக்ஸ்தான் வீரர் ஸசுர்பெக் அனோர்பயேவை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை வீரர் மீகல்ல தேனுவன் பண்டார தோல்வியைத் தழுவினார்.
இரண்டாவது சுற்றில் இலங்கை வீரர் தேனுவன் பண்டார தடுமாற்றம் அடைந்ததால் போட்டியை மத்தியஸ்தர் முடிவுக்கு கொண்டுவந்தார்.
22 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 63 கிலோ கிராம் எடைப் பிரிவு கால் இறுதியில் சவூதி அரேபிய வீரர் அல்ஹவ்சவ் மூசாவிடம் 2ஆம் சுற்றுடன் இலங்கை வீரர் முதித்த மெத்சர பாரிஸ் தோல்வி அடைந்தார்.
இரண்டாம் சுற்றில் முதித்த மெத்சர பாரிஸ் தடுமாற்றம் அடைந்தவராக காணப்பட்டதால் மத்தியஸ்தர் போட்டியை நிறுத்தி சவூதி அரேபிய வீரருக்கு வெற்றியை அளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM