தேனில் ஊறவைத்த பூண்டு… இத்தனை நன்மைகளைத் தருமா?

16 May, 2025 | 04:59 PM
image

பண்டைய காலம் முதலே பூண்டை வெறும் உணவுக்காக மட்டும் அல்லாமல், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தி வரப்படுகிறது. மேலும் பூண்டு மற்றும் தேன் இரண்டையும் மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர்.

பூண்டை கண்ணாடி போத்தலில் போட்டு, அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தும் பயன்படுத்தலாம்.

தேனில் ஊறவைத்த பூண்டு உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது. உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.

சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும் சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல் நலப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது.

சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்க சிறந்த மருந்தாகும். இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.

பக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும். பூண்டு இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் நீரிழிவு நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் காலை வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டியளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை இதை அரை தேக்கரண்டி அளவில் உட்கொள்ளலாம்.

இதனை உணவு உண்ட பிறகு உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது நல்ல பலனை தரும். மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயர் குருதி அழுத்த பாதிப்பை அலட்சியப்படுத்தலாமா..?

2025-06-19 17:22:27
news-image

விரும்பதகாத சருமத்திற்கான நவீன சிகிச்சை

2025-06-18 17:38:39
news-image

உறக்கம் தொடர்பான கோளாறுக்குரிய நவீன சிகிச்சை

2025-06-17 16:02:55
news-image

ஒவேரியன் டெரடோமா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-06-16 17:30:08
news-image

ரிலாப்சிங் பொலிகாண்ட்ரிடிஸ் எனும் அரிய பாதிப்பிற்குரிய...

2025-06-14 17:17:51
news-image

ஹைபோநெட்ரீமியா பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-10 19:06:52
news-image

நவீன சத்திர சிகிச்சைகளின் வகைகள் என்ன?

2025-06-09 17:38:05
news-image

லும்பர் ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் எனும் கீழ்ப்பக்க...

2025-06-07 20:35:08
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்புச் சக்தியை...

2025-06-06 18:22:59
news-image

மிட்ரல் வால்வு ஸ்டெனோசிஸ் எனும் இதய...

2025-06-05 17:22:20
news-image

களனி பல்கலைக்கழக ராகம மருத்துவப்பீடத்தில் புதிய...

2025-06-05 13:51:58
news-image

இன்ஹேலரை பாவித்தால் குருதி அழுத்தம் அதிகரிக்குமா?

2025-06-04 18:15:59