இன்றைய திகதியில் கடன் வாங்காதவர்களே கிடையாது என உறுதியாக சொல்லலாம். ஆயுள் முழுவதும் கடன் வாங்காமல் வாழ்க்கையை வாழ்பவர்களின் எண்ணிக்கை நூறுகளில் தான் இருக்கும். இந்தத் தருணத்தில் எம்மில் சிலர் எப்படி கடனாளி ஆனேன்? என்று தெரியவில்லை சார். ஆனால் கடலில் மூழ்கி, நிம்மதியை தொலைத்து விட்டேன். நான் கடனை அடைப்பதற்காகவே பிறந்தது போல் இருக்கிறது என புலம்புவார்கள். இந்த தருணத்தில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் கடன் ஏற்படுவதற்கான காரணத்தையும், அதற்கான பரிகாரத்தையும் முன்மொழிந்திருக்கிறார்கள்.
நெருங்கிய உறவினர்கள் யாரேனும் இறந்து விட்டால்.. அந்த சடலத்தை சுற்றி உள்ள எண்பத்தியெட்டு அடி வரை தோஷம் உள்ளது. இந்த 88 அடிக்குள் நீங்கள் பசியாறினாலோ அல்லது ஏதேனும் உணவை சாப்பிட்டாலோ... உங்களுக்கு தீரா கடன் உருவாகும். ஏனெனில் இது பிரேத சாபம் ஆகும். அதையும் கடந்து சாப்பிட்டால் சாப்பிட்ட தருணத்திலிருந்து மூன்றாண்டுக்குள் மீளா கடனில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
அத்துடன் சிலருக்கு அவர்களுடைய ஜாதக கட்டத்தில் ஆறாம் அதிபதியுடன் நவகிரகங்களின் இணைவு இருக்கும். இதற்காகவும் தவிர்க்க இயலாத சூழலில் கடன் வாங்க நேரிடும். இந்த கடனை எப்படி அடைப்பது ? என்பதில் சவால்களும் உண்டு. சங்கடங்களும் உண்டு.
கடனை திருப்பி செலுத்துவதற்கு தொழில், திறமை ,உழைப்பு, அதிர்ஷ்டம்... ஆகியவை வேண்டும். இதை விடுத்து ஆலய பரிகாரங்கள் மேற்கொள்வதில் அர்த்தம் இல்லை. வெற்றி பெற வேண்டும்... கடன் வாங்கியவரிடம் கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற எண்ணம் முதலில் எமக்கு ஏற்பட வேண்டும்.
அத்துடன் உத்திரட்டாதி /ரேவதி நட்சத்திர தினமும், சாத்தியம் நாம யோகமும் இணைவு பெற்ற நாளில் தமிழகத்தில் திருச்சி அருகே உள்ள ஸ்ரீ ரங்கம் சென்று, அங்குள்ள மகாலட்சுமி தாயாரை தரிசிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாதரிடம் பிரார்த்திக்க வேண்டும். இதன்பிறகு உங்களது கடன் சுமை குறைவதை அனுபவத்தில் காணலாம்.
உடனே எம்மில் சிலர் ஏற்கனவே நாங்கள் மீளாத கடனில் சிக்கி, வெளியேறத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். இதில் அண்டை நாடான இந்தியாவிற்கு பயணம் செய்து ஸ்ரீரங்கத்திற்கு சென்று மகாலட்சுமி தாயாரை வழிபடுவதெல்லாம் நடக்குமா ? என மனதில் கேள்வியை கேட்டுக் கொள்வர். இதுபோன்ற நபர்களுக்கு ஸ்ரீ ரங்கம் சென்று மகாலட்சுமி தாயாரை தரிசிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால்... உங்களது ஊரில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று, அங்குள்ள மகாலட்சுமி தாயாரை மேலே குறிப்பிடப்பட்ட பிரத்யேக தினத்தன்று சென்று வழிபட்டாலும் பலன் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM