இசைஞானி இளையராஜா வெளியிட்ட புதுமுங்களின்  ' தட்டுவண்டி 'பட ஃபர்ஸ்ட் லுக்

16 May, 2025 | 04:58 PM
image

புதுமுக கலைஞர்கள் நடிப்பில் தயாராகி இருக்கும் ' தட்டு வண்டி'  எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இசைஞானி இளையராஜா வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் விஜயபாஸ்கர் எழுதி இயக்கியிருக்கும் இந்த ' தட்டு வண்டி'  திரைப்படத்தில் குறைவான கதாபாத்திரங்களே முதன்மையான வேடத்தில் நடித்திருக்க, இப்படத்திற்கு வணிக ரீதியான அடையாளத்தை இசைஞானி இளையராஜா இசையமைத்து, உருவாக்கி வழங்கியிருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். எம். நானு தயாரித்திருக்கிறார்.‌

ஒடுக்கப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரின் வாழ்வாதாரமாக திகழும் தட்டு வண்டியின் பின்னணியில் உணர்வுபூர்வமான படைப்பாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு இசைஞானியின் பின்னணி இசை ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்