‘வலையில் கண்ட முகம்…’ யார் இந்த ?

16 May, 2025 | 04:58 PM
image

இணையதளத்தை உயயோகிப்பவர்கள் யாராக இருந்தாலும்,இந்த முகத்தை தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஆனால் யார் இவர் என்று தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. இவர் பெயர் ஒசிட்டா ஐஹிம் (Osita Iheme) ஆகும். 

கலைக்கு மொழி கிடையாது என்பார்கள். அதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு தான் இவர். தன் முகபாவத்தாலும், உடல் மொழியாலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களை தன்பால் ஈர்த்தவர். இவரைப் பார்ப்பவர்கள் இவர் ஒரு சிறுவன் என்றே கருதுவதுண்டு. 

பார்க்க சிறுவன் போல் இருக்கும் இவருக்கு வயது 43. நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபலமான நடிகரான இவர், உடல் வளர்ச்சி இல்லாமல் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

1982ஆம் ஆண்டு பிறந்த ஒசிட்டா (Ositta) விற்கு சினிமா மீதும் நடிப்பு மீதும் தீராக் காதல் இருந்தது. மேற்படிப்புக்காக, லாகோஸ்க்கு இடம் பெயர்ந்த ஒசிட்டா, Lacos State university இல் மாஸ் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு சினிமாவிற்கு நடிக்க வந்தார்.

(ஒசிட்டா தன் மனைவி மற்றும் குழந்தையுடன்) 

2001ஆம் ஆண்டு ஒசிட்டாவிற்கு முதல் பட (Okna na uha) வாய்ப்பு கிடைத்தது, அதுவும் சிறுவனாக நடிக்க. 18 வயது நிரம்பிய இளைஞர் சிறுவனாக நடிக்க வேண்டிய சூழ்நிலை. காரணம் உடல் வளர்ச்சி இல்லாமை, இருப்பினும் சிறுவனாக நடித்து அந்த நகைச்சுவை கதாபாத்திரத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். தனது இரண்டாது படத்திலும் (Aka Gum) ஏறக்குறைய அதே கதாபாத்திரம் தான் என்றாலும், நகைச்சுவையில் அசத்தியிருப்பார்.

இவரின் பாதகமான உடல் வளர்ச்சியே. சினிமாவில் அவரை பிரபலமாக்கியது. இந்த இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு ஒரே வருடத்தில் பதினெட்டு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

2003ஆம் ஆண்டு ஓசிட்டா தன்னைப் போன்றே உடல் வளர்ச்சி இல்லாத தன் நண்பனை சேர்த்துக்கொண்டு நடித்த நகைச்சுவை படம் தான் அகினா உகுவா (Akina Ukwa). இந்தப் படத்தில் வரும் காட்சிகள் தான் இன்று இணையத்தில் மீம்ஸ் ஆக மாறியுள்ளன.

இந்தப்படத்தில் இவர் பெயர் Pawpaw மற்றும் நண்பர் பெயர் Aki ஆகும். இவரது இரசிகர்கள் இவரை PawPaw என்றே அழைக்கின்றனர்.

மேலும், நைஜீரிய சினிமாவில் உயரிய விருதான Nigerian Academy Award இல், இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதனை பெரும்போது அவருக்கு வயது 25 ஆகும். நைஜீரியாவில் தேசிய விருது அந்த நாட்டின் வளரசிக்கு உதவுபவர்களுக்கு வழங்கப்படும். ஒசிட்டா நைஜீரியாவின் தேசிய விருதையும் பெற்றவர் ஆவார்.

இதுவரை 150க்கு மேலான படங்களில் ஒசிட்டா நடித்துள்ளார். நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அசத்தி வருகிறார். இவரின் சொந்த ஊரில் 100 மில்லியன் டொலர் செலவில் சொகுசு வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். நைஜீரியாவில் முதல் ஐந்து பணக்காரர்களில் இவரும் ஒருவர்.

அதேசமயம், Inspired movement of Africa என்ற பெயரில் ஒரு இயக்கத்தை உருவாக்கி, ஆபிரிக்காவில் உள்ள அடித்தட்டு இளைஞர்களுக்கு நிதி உதவியும் செய்து உதவி வருகிறார் ஒசிட்டா. 

மேலும், சிறு வயது முதலே புத்தகங்கள் படித்து முன்னேறியவன் என தன்னை கூறிக்கொள்ளும் ஒசிட்டா, Inspired 101 என்ற புத்தகத்தை எழுதி தனது சொந்த பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்திசாலி யானைகள் : வைரலாகும் வீடியோ

2025-06-12 19:09:30
news-image

மன்னாரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான...

2025-06-09 14:07:39
news-image

கடலும் காடும் கலந்த “ஆழிவனம்” 

2025-06-09 14:10:39
news-image

ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன்...

2025-06-07 12:57:45
news-image

29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை குறித்து...

2025-05-30 14:45:05
news-image

அமானுஷ்யங்கள் நிறைந்த ஜப்பானின் “தற்கொலை காடு”

2025-05-28 16:57:48
news-image

நுவரெலியாவில் இயற்கை அழகின் மையப்பகுதியாக திகழும்...

2025-05-27 18:37:56
news-image

பொலிஸ் அதிகாரியை தாக்கிய “குற்றவாளி” பூனை...

2025-05-24 18:09:10
news-image

ஒரே இடத்தில் மூன்று இயற்கை அற்புதங்கள்!...

2025-05-19 17:24:17
news-image

‘வலையில் கண்ட முகம்…’ யார் இந்த...

2025-05-16 16:58:29
news-image

`நாடாகவே' அங்கீகரிக்கப்படாத நாடுகள்

2025-05-16 13:34:10
news-image

தாஜ்மகாலை தன்னந்தனியாகச் சுற்றி பார்க்க முடியுமா?

2025-05-13 10:42:50