(நெவில் அன்தனி)
லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான வழிமுறையை பின்பற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் (ICC), மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் நிறுவனம் (CWI) கோரிக்கை விடுத்துள்ளது.
லொஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் போட்டி இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 1900 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலேயே முதன் முதலில் கிரிக்கெட் அறிமுகமானது. பெரிய பிரித்தானியாவும் பிரான்ஸ}ம் மாத்திரம் பங்குபற்றிய அப் போட்டியில் பெரிய பிரித்தானியா வெற்றிபெற்றிருந்தது.
லொஸ் ஏஞ்சிலிஸ் ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் கரிபியன் தீவுகளிலிருந்து குறைந்தது ஒரு அணியையாவது விளையாட அனுமதிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கரிபியன் தீவுகளில் கிரிக்கெட் விளையாடும் பார்படோஸ். ஜெமெய்க்கா, ட்ரினிடாட், கயானா, சென். லூசியா ஆகிய அணிகள் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிறுவனத்தின்கீழ் மேற்கிந்தியத் தீவுகள் என்ற ஒரே அணியாக பங்குபற்றுகின்றன.
ஆனால், இறையான்மை கொண்ட நாடுகளுக்கு மாத்திரமே ஒலிம்பிக்கில் பங்குபற்ற சர்வதேச ஒலிம்பிக் பேரவை அனுமதிக்கிறது.
லொஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 6 நாடுகளுக்கு மாத்திரமே கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற வாய்ப்பு கிட்டியுள்ளது.
இதன் காரணமாக இறையான்மைக் கொண்ட ஏதாவது ஒரு நாட்டை தங்களது பிராந்தியத்திலிருந்து இணைக்க வேண்டும் என மேற்கிந்தியத் தீவுகள் எதிர்பாரக்கிறது.
அணிகளுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் ஆடவர் அணி 5ஆவது இடத்திலும் மகளிர் அணி 6ஆவது இடத்திலும் இருக்கின்றன.
மேலும் ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தை இரண்டு தடவைகளும் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை ஒரு தடவையும் மேற்கிந்தியத் தீவுகள் சுவீகரித்துள்ளது.
எவ்வாறாயினும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற வகையில் ஐக்கிய அமெரிக்காவுக்கு நேரடி வாய்ப்பு கிடைப்பது உறுதியாகியுள்ளது. எனவே எஞ்சிய ஐந்து இடங்களைத் தீர்மானிப்பதில்தான் சிக்கல் எழப் போகிறது.
இது இவ்வாறிருக்க, ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கான தகுதிகாண் முறைமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இதுவரை வெளியிடவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM