(நெவில் அன்தனி)
இந்தியாவில் நடைபெற்றுவரும் 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர் ஜொஸ் பட்லருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இலங்கையின் குசல் மெண்டிஸ் விளையாடவுள்ளார்.
திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணைக்கு அமைய ஐபிஎல் ப்ளே ஓவ் போட்டிகள் இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான காலப்பகுதியிலேயே நடைபெறவுள்ளன.
இந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் குழாத்தில் ஜொஸ் பட்லரும் பெயரிடப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக ஐபிஎல் ப்ளே ஓவ் போட்டிகளில் பட்லர் விளையாடமாட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலாவது தகுதிகாண் போட்டி இம் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதே தினத்தன்று இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரும் ஆரம்பமாகவுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் குழாத்தில் ஏற்கனவே மற்றொரு இலங்கை வீரர் தசுன் ஷானக்க இடம்பெற்றுள்ளார். அவர் ஹெரி ப்றூக்ஸுக்குப் பதிலாக குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டார். ஆனால், அவர் இதுவரை ஒரு போட்டியிலும் விளையாடவில்லை.
எனினும் குசல் மெண்டிஸ் நேரடியாக குஜராத் அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஜொஸ் பட்லர் பிரதான விக்கெட் காப்பாளராகவும் அதிரடி துடுப்பாட்ட வீரராகவும் இடம்பெற்றார். எனவே அவரது இடத்தை குசல் மெண்டிஸ் நிரப்புவார் என நம்பப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM