தினசரி பல மில்லியன் இலங்கையர்களுக்கு சிக்கனமான போக்குவரத்து வசதியை வழங்கும், இலங்கையின் போக்குவரத்துக் கட்டமைப்பில் மிகவும் முக்கிய பங்கைக் கொண்டுள்ள முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக ஒரியன்ட் பைனான்ஸ் புதிய Orient Tuk லீசிங் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலாவது மாத வாடகைத் தவணை செலுத்துவதற்கு இரு மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. அத்துடன், குறைந்த மாதாந்த தவணைகள் மற்றும் உயர்ந்த பெறுமதியை பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது.
முச்சக்கர வண்டி சாரதிகள் நாளாந்தம் எதிர்கொள்ளும் நிதிச் சவால்களை கவனத்தில் கொண்டு, அவற்றுக்கு சிறந்த முறையில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாக இந்த Orient Tuk லீசிங் திட்டம் அமைந்துள்ளது. சாரதிகளுக்கு ஏற்படக்கூடிய பழுதுபார்ப்பு செலவுகள், வீடுகளில் எழக்கூடிய செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்ற பல அம்சங்களைக் கவனத்தில் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் ஆயுள் காப்புறுதித் திட்டமொன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சாரதி எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும்பட்சத்தில், குடும்பத்தாருக்கு ரூ. 500,000 தொகை செலுத்தப்படும். ஷரியா முறையிலான நிதித் தீர்வுகளை எதிர்பார்ப்பவர்களுக்கு,ஒரியன்ட் பைனான்ஸ், இஜாரா Tuk லீசிங் திட்டம் வழங்கப்படுகிறது.
பல சாரதிகள் தமது வாழ்நாள் சேமிப்பை, ஆரம்பக் கொடுப்பனவில் முதலீடு செய்வதை கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு குறுங்கால நிவாரணத்தையும், நீண்ட கால நிதிசார் உறுதித் தன்மையையும் பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்வதாக ஒரியன்ட் பைனான்ஸ் லீசிங் திட்டம் அமைந்துள்ளது. சாரதிகளின் வாழ்வாதாரம், அவர்களின் அன்புக்குரியவர்கள் மற்றும் அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வலுவூட்டுவது நிறுவனத்தின் இலக்காக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, இலங்கையின் முச்சக்கர வண்டி சாரதிகளுடன் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி ஒரு நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக மாத்திரமன்றி, சக தோழனாக தொடர்ந்தும் இணைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM