'எனது சகோதாரர் காணாமல்போனமைக்கும் பிள்ளையானிற்கும் தொடர்புள்ளது - இது குறித்து எனது மனதில் எந்த சந்தேகமும் இல்லை, "- பேராசிரியர் ரவீந்திரநாத்தின் சகோதரர்

Published By: Rajeeban

16 May, 2025 | 04:30 PM
image

tamilguardian

எனது சகோதரர் காணாமல்போனமைக்கும் பிள்ளையானிற்கும் தொடர்புள்ளது என நான் உறுதியாக நம்புகின்றேன் இது குறித்து எனது மனதி;ல் எந்த சந்தேகமும் இல்லை என 2006 இல் காணாமலாக்கப்பட்ட கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத்தின் சகோதரர் ராஜ் தமிழ் கார்டியனிற்கு தெரிவித்துள்ளார்

தமிழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது

கேள்வி- உங்கள் சகோதரர் பற்றியும் அவர் எவ்வாறானவர் என்பது பற்றியும் தெரிவிக்க முடியுமா?

பதில்- எனது சகோதாரர் சிறுவயதிலேயே மிகுந்த புத்திசாலி,அவர் அமைதியானவர் சிந்திப்பவர்,யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் அவர் கல்வி பயின்றார்,கல்வியில் சிறந்து விளங்கியமைக்காக பெயர் பெற்றார்,காலப்போக்கில் அவர் ஒரு கௌரவமான வாழ்க்கையை உருவாக்கி பேராசிரியராகவும் பின்னர் கிழக்கு பல்கலைகழக துணைவேந்தராகவும் மாறினார்.

மக்கள்  எப்போதும் அவரை போற்றினார்கள் அவர் மற்றவர்களை கண்ணியத்துடன் நடத்தினார்.

ஈழப்போராட்டத்தை பொறுத்தவரை அவர் ஆயுதபோராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்வில்லை,ஆனால் தனது வழியில் அதற்கு பங்களிப்பு செய்தார்.

விவசாயத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர் என்பதால் தனது அனுபவத்தை விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டார்.குறிப்பாக மட்டக்களப்பில் விவசாயம் மீன்பிடித்துறைகளை வளர்ப்பதற்கு உதவினார்.

அவரது பணி காரணமாக அவர் விடுதலைப்புலிகளின் தலைவருடன் பல முறை தொடர்புகொண்டார்,விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கருணா பிள்ளையான் இருந்தவேளை அவர்களுடன் தொடர்பிலிருந்தார்.

கேள்வி- 2006ம் ஆண்டு உங்கள் சகோதரர் கடத்தப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தெரிவிக்க முடியுமா?

பதில்- அவ்வேளை கிழக்குபல்கலைகழகத்தில் பல பிரச்சினைகள் காணப்பட்டன,ஊழல்கள் காணப்பட்டன அதற்கு காரணமானவர்களை எச்சரித்த எனது சகோதரர் அவற்றை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

இது இயல்பாகவே பதற்றத்தை உருவாக்கியது.எனது சகோதரர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன பின்னர் அவை அச்சுறுத்தல்களாக மாறின.

கருணா பிள்ளையான் அவர்களுடன் தொடர்புபட்டவர்களிடமிருந்து அவர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார்.

அவரது குடும்பத்தின் பாதுகாப்பு அவரின் கரிசனைக்குரிய விடயமாக மாறியது.

ஆனால் இத்தனைக்கு அப்பாலும் அவர் மட்டக்களப்பில் தங்கியிருந்து தனது பணியை தொடர முயன்றார்,ஆனால் இறுதியில் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியது.அவர் பாதுகாப்பிற்காக கொழும்பிற்கு செல்ல தீர்மானித்தார்.

நான் அவரை லண்டனிற்கு வருமாறு மன்றாடிக்கேட்டேன் ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

அவர் உத்தியோகபூர்வமாக தனது பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்தார்.

அவரின் இறுதி தொலைபேசி உரையாடல் எனக்கு நினைவில் இருக்கின்றது, 2006 டிசம்பர் 15ம் திகதி இறுதிநிர்வாக கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக அவர் தெரிவித்தார்.அவருடன் நான் தொலைபேசியில் உரையாடியது அதுவே இறுதிதடவை.

கேள்வி- அதிகாரிகள் அவ்வேளை எவ்வாறு செயற்பட்டனர்?இந்த விடயத்தை தீவிரமாக எடுத்தனரா?

பதில்-அதிகாரிகள் இந்த விடயத்தை தீவிரமாக எடுத்திருந்தால்,அவருக்கு என்ன நடந்தது என்பது தற்போது எங்களிற்கு தெரியவந்திருக்கும்.அவர்கள் அதனை புறக்கணித்தனர் என்பதற்கு அப்பால் இடம்பெற்ற விடயங்களுடன் தொடர்புபட்டிருந்தனர்.

எனது சகோதரர் பதவி விலகியவேளை பாதுகாப்பு கோரி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றை எழுதினார்.இறுதி கூட்டமன்றும் விசேடமாக பாதுகாப்பை கோரினார், ஆனால் அவர்கள் உரிய பாதுகாப்பை வழங்கவில்லை.

மாறாக அவர்கள் அந்த இறுதி கூட்டத்தில் அவர் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என வற்புறுத்தினார்கள்.

தனது நிலையை நிரூபிப்பதற்கான மின்னஞ்சல் கடிதம் அவரிடமிருந்தது.ஆனால் அவர்கள் அவரை கைவிட்டனர்.அவர் காணாமல்போனதில் அவர்களிற்கு தொடர்புள்ளது.

கேள்வி- பிள்ளையான் சமீபத்தில் விசாரணை செய்யப்பட்டமைகுறித்து உங்கள் கருத்து என்ன?உங்கள் சகோதரர் காணாமல்போனமைக்கும் இதற்கும் தொடர்பிருக்குமா?

பதில்-

எனது சகோதரர் காணாமல்போனமைக்கும் பிள்ளையானிற்கும் தொடர்புள்ளது என நான் உறுதியாக நம்புகின்றேன் இது குறித்து எனது மனதி;ல் எந்த சந்தேகமும் இல்லை,பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊழல்களிற்கும் பிள்ளையானிற்கும் தொடர்புள்ளது என தெரிவிக்கும் பத்திரிகை செய்திகளை நான் வாசித்துள்ளேன், எனது சகோதரர் இந்த ஊழல்களை எதிர்த்தார்.

எனது சகோதரர் ஒருபோதும் ஊர்க்கதைகளை கதைத்தவர் இல்லை அரசியலில் ஈடுபட்டவர் இல்லை, அவர் சரியானதைதான் செய்தார், அப்படித்தான் வாழ்ந்தார்.

கேள்வி - பிள்ளையானிற்கு எதிரான விசாரணை அரசியல் நோக்கங்களை கொண்டதா அல்லது உண்மையானதா? உங்களின் கருத்து என்ன?

பதில் - முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை.ஆனால் அரசாங்கத்தின் விசாரணைகள் நீதிதொடர்பானவை அல்ல.இது அரசியல் தொடர்பானது.பல அரசாங்கங்கள் வந்து சென்றிருக்கின்றன,இவர்களில்எவரும் நீதியை வழங்குவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.

கேள்வி - இலங்கையில் நீதி என்பது தெரிவு செய்யப்பட்டதாக , அல்லது தாமதிக்கப்பட்டதாக விளங்குகின்றது குறிப்பாக தமிழர் விடயத்தில் என்ற கருத்து குறித்து நீங்கள் என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

பதில்- இலங்கையில் தமிழர்களிற்கு நீதி என்பது இல்லை.நாங்கள் பல வருடங்களாக இதனை தெரிவித்துவருகின்றோம்.முக்கியமான விடயம் நாங்கள் மக்களாக ஐக்கியப்படவில்லை.இந்த நிலை மாறும்வரை நாங்கள் துன்பங்களை அனுபவிப்போம்.

உண்மையான மாற்றம் ஏற்படவேண்டும் என்றால் பிரபாகரன் போன்று இன்னுமொரு தலைவர் உருவாகவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் - ஈரான் மோதல் வரலாற்றில்...

2025-06-22 13:44:34
news-image

தடுக்கப்படும் ஐ.நா.வின் ஆய்வுக்கப்பல்

2025-06-22 12:49:45
news-image

ஆட்சிக்காக இணைவது என்றால் மக்களை பிரித்தது...

2025-06-22 13:07:12
news-image

ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைதல்:...

2025-06-22 11:55:15
news-image

முஸ்லிம்கள் ஏமாளிச் சமூகமா?

2025-06-22 12:25:04
news-image

தமிழரசுக் கட்சி ஒருங்கிணைந்த அரசியலை நோக்கி...

2025-06-22 12:04:05
news-image

வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்ஜென்டீன முன்னாள் ஜனாதிபதி

2025-06-22 11:03:27
news-image

மேற்கு சஹாராவின் ஆட்சி உரிமை

2025-06-22 11:18:24
news-image

அகதி என்ற நிலையில் இருந்து வெளியேறி,...

2025-06-22 09:35:53
news-image

செம்மணி புதைகுழி குறித்த இலங்கையின் மௌனம்...

2025-06-20 17:27:24
news-image

சென்னையில் ஈ.பி.ஆர்.எல் எவ். தலைவர்கள் படுகொலையை...

2025-06-20 09:10:41
news-image

இலங்கையில் இதுவரை 20 மனித புதைகுழிகள்...

2025-06-19 16:06:09