பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - மாலைத்தீவு பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை – மாலைத்தீவு பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான மாலைத்தீவு உயர்ஸ்தானிகர் மசூட் இமாட் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரேஹாணதீர உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார இலங்கை – மாலைத்தீவு பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்போது வரலாற்று, கலாசார மற்றும் பொருளாதாரத் துறைகளில் இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் ஆழமான இருதரப்பு உறவுகளை இரு தரப்புப் பிரதிநிதிகளும் எடுத்துரைத்தனர். அத்துடன், பொது அக்கறை சார்ந்த விடயங்களில் சர்வதேச தளங்களில் இரு நாடுகளும் பரஸ்பர ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தின.
மேலும், சுகாதாரம், விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இரு நாடுகளின் பிரதிநிதிகளும் வெளிப்படுத்தினர்.
அத்துடன், மீள ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நட்புறவுச் சங்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கும் பாராளுமன்ற இராஜதந்திரத்துக்கு அப்பால் மக்களுக்கு இடையேயான உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் ஒரு முக்கிய தளமாக செயற்படும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM