பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை:இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்

16 May, 2025 | 11:50 AM
image

பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை என்றுஇந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில்  அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. இது இருதரப்பு விவகாரம். இதில் 3-ம் தரப்புக்கு இடமில்லை.

தீவிரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே தெளிவுபடுத்தி உள்ளார். இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். அவர்களின் பட்டியலை பாகிஸ்தானிடம் வழங்கி உள்ளோம். அந்த தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை மூட வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும். இதுகுறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்க தாக்குதலிற்கு முன்னர்...

2025-06-22 13:59:22
news-image

அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல்...

2025-06-22 11:23:20
news-image

அமெரிக்காவின் தாக்குதல் - நித்திய விளைவுகளை...

2025-06-22 10:45:26
news-image

பிரேசிலில் வெப்பக்காற்று பலூன் தீப்பற்றி விபத்து;...

2025-06-22 09:48:01
news-image

சமாதானத்திற்கு வராவிட்டால் - எதிர்காலத்தில் மேலும்...

2025-06-22 08:23:35
news-image

அமெரிக்கா அணுஉலைகளை தாக்கியுள்ளது - ஈரானின்...

2025-06-22 07:26:59
news-image

ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க...

2025-06-22 07:13:33
news-image

யுத்தத்தின் ஆரம்பம் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

2025-06-22 06:49:17
news-image

ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல்...

2025-06-22 06:28:37
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்

2025-06-22 06:22:12
news-image

ஈரானின் புதிய தாக்குதலில் இஸ்ரேலில் 17...

2025-06-20 20:01:06
news-image

அரச பயங்கரவாதம் - இஸ்ரேலின் தாக்குதல்கள்...

2025-06-20 15:41:49