இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலிலும் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்றுறை பிரதேச செயலர் ஈஸ்வரானந்தன் தயாரூபன் தெரிவித்தார்.
புளியங் கூடல் இலட்சுமி நாராயணன் அன்னதான மண்டபத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநிர் நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாதர் சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு இடையிலான வினாடி வினாபோட்டி நிகழ்வும் இன்று வியாழக்கிழமை குறித்த மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒப்பீட்டளவில் இளையோர் தமது பொது அறிவுத் தேடலை வளர்த்துக்கொள்ளும் விகிதம் குறைவடைந்து வருகிறது. உண்மையில் இது கவலை தருகின்ற விடயமாகும். பொது அறிவு என்பது அனைத்து வகையிலும் எதிர்காலத்திற்கு பங்காற்றக்கூடியது. அதனை வளர்த்துக்கொளள அக்கறை செலுத்தவேண்டும். உயர் பதவிகளை வகிப்பதற்கான அடிப்படைகூட பொது அறிவுத் தேடல் தான் என்றால் அது மிகையில்லை. என்றும் மேலும் தெரிவித்தார்.
புளியங்கூடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் வகையில் இன்று இலவச குடிநீர் வழங்கும் திட்டம் திறக்கப்பட்டுள்ளமை பாராட்டுதற்குரியது. இன்றைய சூழலுக்கு ஏற்ப இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கும் சமூக அக்கறை கொண்ட மக்கள் பாராட்டப்படவேண்டியவர்கள் ் இதனை பயன்படுத்துபவர்கள் இதன் முக்கியத்துவதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.நிகழ்ஙில் மண்டபத்தில் நடைபெற்ற தையல் பயிற்சி ஆரிவேக் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவர்களுக்கும் ,வினாடி விடை போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் ,பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதேச செயலர், உதவிப் பிரதேச செயலர் உட்பட்ட அரச அதிகாரிகள், மக்கள் எனப் பலரும் பங்குகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM