மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி

Published By: Vishnu

16 May, 2025 | 03:01 AM
image

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள்  மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை (15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஆளுநர்கள் இது தொடர்பில் கோரிக்கை விடுத்ததோடு அதற்கு  ஜனாதிபதி  அங்கீகாரம் வழங்கினார்.

மாகாணங்களில் உள்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் அவை தொடர்பிலான சவால்கள் குறித்து இங்கு  ஆராயப்பட்டதுடன், அந்தப் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட மூன்று மடங்கு நிதி மாகாண சபைகளுக்குக் கிடைத்துள்ள நிலையில் இந்த ஆண்டு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். அந்த நிதிகளை முறையாக முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, ஜனாதிபதியின்  சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப், மத்திய மாகாண ஆளுநர் சரத் பண்டார சமரசிங்க, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணகுலசூரிய, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார விமலசிறி, வட  மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர, சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, ஊவா மாகாண ஆளுநர் கபில ஜெயசேகர உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-06-16 06:07:20
news-image

“ இலங்கையின் மீட்பு பாதை -...

2025-06-15 20:11:07
news-image

சஜித் - நாமல் இணைந்து ஆட்சியமைப்பதாகக்...

2025-06-15 20:09:24
news-image

வவுனியா மாநகரசபையின் முதல்வராக காண்டீபன்? ; ...

2025-06-16 03:55:17
news-image

வவுனியா மாநகரசபையில் நாங்களே ஆட்சியமைப்போம் -...

2025-06-16 03:36:26
news-image

ஓட்டமாவடியில் ஒரே நேரத்தில் இரு இடங்களில்...

2025-06-16 03:37:24
news-image

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை இலங்கை...

2025-06-16 03:21:05
news-image

ஐக்கிய மக்கள் சக்தி தற்போது தெரிவு...

2025-06-16 02:57:36
news-image

கொழும்பில் ஆட்சியமைப்பது இலகுவானதல்ல ; இறுதிவரை...

2025-06-15 20:06:34
news-image

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க எந்தவொரு...

2025-06-15 18:33:56
news-image

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சு...

2025-06-15 23:25:35
news-image

எலிக்காய்ச்சலால் பரவல் தீவிரம்: பொதுமக்கள் அவதானத்துடன்...

2025-06-15 21:29:17