(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தைத் தளமாகக் கொண்டு இயங்கம் ஸ்ரீ லயன்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் பயிற்சியகம் இரண்டாவது வருடமாக கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள ஸ்ரீ லயன்ஸ் சர்வதேச வலைபந்தாட்ட லீக் சுற்றுப் போட்டி இவ் வார இறுதியில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் வலைபந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் குறிககோளுடன் ஸ்ரீ லயன்ஸ் சர்வதேச வலைபந்தாட்ட லீக் போட்டியை தொடர்ந்து நடத்துவதாக ஸ்ரீ லயன்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் டாக்டர் கெலும் சுஜித் பெரேரா தெரிவித்தார்.
பம்பலப்பிட்டி முச்சந்தியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை உள்ளக அரங்கிலும் புனித சூசையப்பர் கல்லூரி உள்ளக அரங்கிலும் ஸ்ரீ லயனஸ் சர்வதேச வலைபந்தாட்ட லீக் போட்டிகள் மே 16, 17, 18ஆம் திகதிகளில் நடைபெறும்.
இறுதிப் போட்டி புனித சூசையப்பர் கல்லூரி உள்ளக அரங்கில் மே 18ஆம் திகதி இரவு 7.00 மணிக்கு மின்னொளியில் நடைபெறவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு வைபவம் நடைபெறும்.
இவ் வருடப் போட்டியில் புருணை, தேசிய சேவைகள் வலைபந்தாட்ட சங்கம், வர்த்தக சேவை வலைபந்தாட்ட சங்கம், இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கம், கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம், ஸ்ரீ லயன்ஸ் இன்டர்நெஷனல் ஆகிய ஆறு அணிகள் பங்குபற்றுகின்றன.
சர்வதேச வலைபந்தாட்ட சங்க விதிகளுக்கு அமைய லீக் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று எதிர்த்தாடும். லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டியிலும் மற்றைய 4 அணிகள் நிரல்படுத்தல் போட்டிகளிலும் விளையாடும்.
இதேவேளை, கனிஷ்ட அணிகளுக்கு இடையிலான வலைபந்தாட்டப் போட்டியும் கண்காட்சி வலைபந்தாட்டப் போட்டியும் நடத்தப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் விளையாட்டுத்துறை மற்றும் ஐக்கியத்தைப் பிரதிபலிக்கும் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM