(நெவில் அன்தனி)
இங்கிலாந்தின் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற சம்பியனாகும் அணிக்கு வழங்கப்படவுள்ள பணப்பரிசு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி உறுதி செய்துள்ளது.
இதற்கு அமைய சம்பியனாகும் அணிக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை கநாணயப்படி 107 கோடியே 53 இலட்சம் ரூபா) பணப்பரிசு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (62 கோடியே 68 இலட்சம் ரூபா) பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவும் முதல் தடவையாக தென் ஆபிரிக்காவும் பங்குபற்றுகின்றன.
இந்த இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இப் போட்டியில் 5 நாட்களில் முடிவு கிட்டாவிட்டால் 6ஆம் நாளன்று போட்டி தொடரும்.
கடந்த இரண்டு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயங்களில் சம்பியன்களான நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் பெற்ற பணப்பரிசைவிட இம்முறை பணப்பரிசு இரட்டிப்பு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தும், அவுஸ்திரேலியாவும் கடந்த இரண்டு அத்தியாயங்களில் சம்பியனானபோது 1.6 மில்லியன் அமெரிக்கா டொலர்களைப் பணப்பரிசாக வென்றெடுத்தன.
அந்த இரண்டு அத்தியாயங்களிலும் தோல்வி அடைந்த இந்தியாவுக்கு தலா 800,000 அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக கிடைத்தது.
மூன்றாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி பருவ முடிவில் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 69.44 புள்ளிகளுடன் முதலாம் இடத்தையும் அவுஸ்திரேலியா 67.54 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.
இதேவேளை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 4ஆம் இடத்திலிருந்து 6ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட இலங்கைக்கு 840,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 25 கோடி ரூபா) கிடைக்கவுள்ளது.
ஏனைய பணப்பரிசுகள்
இந்தியா 3ஆம் இடம் - 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
நியூஸிலாந்து 4ஆம் இடம் - 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
இங்கிலாந்து 5ஆம் இடம் - 960,000 அமெரிக்க டொலர்கள்
பங்களாதேஷ் 7ஆம் இடம் - 720,000 அமெரிக்க டொலர்கள்
மேற்கிந்தியத் தீவுகள் 8ஆம் இடம் - 600,000 அமெரிக்க டொலர்கள்
பங்களாதேஷ் 9ஆம் இடம் - 480,000 அமெரிக்க டொலர்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM